கூந்தல் என்பது அழகு அடையாளம் மட்டுமில்லை. தன்னம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது. தலைமுடிக்கு சீகைக்காய், செம்பருத்தி இலை, நெல்லிக்காய் ஆரோக்கியம் என தெரியும். ஆனால், பயன்படுத்த யாரிடம் நேரம் இருக்கு.எளிமையாக பயன்படுத்த முடிவதால், அனைத்து வீடுகளின் குளியலறையிலும் தவிர்க்க முடியாத இடத்ததை ஷாம்பு பிடித்துள்ளது. எத்தனை பிராண்டுகள், எத்தனை விதங்கள் இவற்றில் உங்கள் தலைமுடிக்கு சரியான ஷாம்புவை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.உங்கள் முடி எந்த வகை?தலைமுடியில், சாதாரண, வறண்ட, எண்ணெய் பசை என, பல வகைகள் உண்டு. ஒவ்வொரு தலைமுடிக்கு ஏற்ப, ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. உங்கள் தலைமுடிக்கு எந்த ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என தோல் மருத்துவரிடம் கேட்டு, அதன் வகையில் ஷாம்புவை பயன்படுத்துவது முக்கியம்.சாதாரண கூந்தல்சாதாரண கூந்தல் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாள் குளித்தால் போதுமானது. அளவுக்கு அதிகமாக தலைக்கு குளித்தால், தலையில் இருக்கும் எண்ணெயை நீக்கி, சாதாரண கூந்தல் வறட்சியாக்கி விடும். மைல்டு டிடர்ஜென்ட் உள்ள ஷாம்புவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஓரளவுக்கு ஈரப்பதத்தை தரும், பென்சாய்ல் இருக்கும் ஷாம்புவை பயன்படுத்தலாம்.வறண்ட கூந்தல்முடியில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஷாம்புவை வறண்ட கூந்தல் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, டிடர்ஜென்ட் உள்ள ஷாம்புவை பயன்படுத்தக் கூடாது. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் தினசரி தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். மிகவும் வறண்ட கூந்தல் எனில், இன்டென்ஸ் மாய்ஸ்சரைசிங் ஷாம்பு பயன்படுத்தலாம்.எண்ணெய் பசை கூந்தல்எண்ணெய் பசை கூந்தலில் எளிதில் துாசு, மாசுக்கள் படிந்து விடும். இவர்கள், தினசரி அல்லது ஒருநாள் விட்டு, ஒருநாள் தலைக்கு குளிக்கலாம். ஆனால், மைல்டான, ஹெர்பல் ஷாம்புவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, எலுமிச்சை, மருதாணி, சீயக்காய் கொண்ட ஷாம்புகள் சிறந்தவை. பொடுகு உள்ளவர்கள் அதற்கான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.எப்படீங்க யூஸ் பண்றது* ஷாம்புவை அப்படியே வறண்ட தலையில் தேய்க்க கூடாது. தலையை நனைத்த பின்பு ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.* நேரிடையாக ஷாம்புவை கூந்தலில் போட கூடாது. கிண்ணத்தில் ஷாம்புவை ஊற்றி, தண்ணீரை நன்றாக கலக்கி, பிறகு பயன்படுத்த வேண்டும்.* கண்டிஷனரை அப்ளை செய்து, பரிந்துரைக்கப்பட்ட நேரம் மட்டுமே தலையில் வைத்திருக்க வேண்டும். இஷ்டத்திற்கு வைத்திருந்தால், அரிப்பு, எரிச்சல் உண்டாகும்.* பி.எச்., அளவு 5.5 இருக்கும் ஷாம்பு மிதமானது. பி.எச்., அளவு 5 - 7 வரை இருக்கும் ஷாம்புவை பயன்டுத்துவது பாதுகாப்பானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE