மேட்டுப்பாளையம்:காரமடை அரங்க நாதர் கோவிலில், தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது.கோவை மாவட்டத்தில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற, வைணவ ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தேர்திருவிழா, மிக சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா, கிராம சாந்தியுடன் நேற்று துவங்கியது. இன்று காலை, 11:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது; இரவு அன்னவாகனத்தில், சுவாமி வீதியுலா வருகிறார்.வரும், 25ல் பெட்டதம்மன் அழைப்பு, 26 அதிகாலை, 5:30க்கு திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு யானை வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. 27 அதிகாலை, 5:30க்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருள்கிறார். மாலை, 4:00க்கு தேரோட்டம் நடக்கிறது.வரும், 28ல் குதிரை வாகனத்தில் பரிவேட்டை, மார்ச், 1ல் தெப்போற்சவம், 2ல் சந்தான சேவை சாற்று முறை, 3ல் வசந்தம் விழா நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE