திருப்பூர்:கோவையில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில், பா.ஜ., இளைஞரணியினர், மோடி, தாமரை படம் மற்றும் தமிழ், ஆங்கில வாசகங்களுடனான, 'டி - ஷர்ட்' அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.
கோவையில், வரும் 25ம் தேதி, பா.ஜ., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகிறார். திருப்பூர் மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி சார்பில், கூட்டத்தில் திரளாகச் சென்று பங்கேற்க ஏற்பாடு நடந்து வருகிறது. இளைஞர் அணியினர் அணிந்து செல்லும் வகையில், 'டி - ஷர்ட்' தயார் செய்யப்பட்டுள்ளது.
மூவர்ண கொடி நிறத்திலான,'டி - ஷர்ட்' முன்புறம், தாமரை மற்றும் பிரதமர் மோடி படம், 'தமிழையும் தேசத்தையும் காக்கும்' என்ற தமிழ் வாசகம், மோடியின் படத்துக்கு மேலும், அதன் கீழ், ஆங்கிலத்தில், 'தி கிரேட்டஸ்ட் இண்டியன், யெஸ் இண்டியா கேன்' ஆகிய வாசகமும் இடம்பெற்றுள்ளன.
இந்த, 'டி - ஷர்ட்' அணிந்து கூட்டத்தில் பங்கேற்கவும், அங்கு கட்சியினருக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று கோவை வந்த பா.ஜ., மாநில தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், பிரதமர் பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து, ஆலோசனை நடத்தினர். அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE