பெங்களூரு : பெங்களூரு அரண்மனை மைதானத்தில், பஞ்சமசாலி லிங்காயத் சமுதாயத்தினர் மாநாடு இன்று நடக்கிது. இதையடுத்து, அப்பகுதி சுற்றுவட்டாரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சமசாலி லிங்காயத் சமுதாயத்தை, பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும்படி வலியுறுத்தி, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், இன்று மாநாடு நடத்தப்படுகிறது. இதில், லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த வெவ்வேறு மடாதிபதிகள், அனைத்து கட்சி தலைவர்கள் உட்பட மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் சேருவர் என எதிர்பார்க்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ரயில், பஸ், கார் மூலம் அச்சமுதாயத்தினர் பெங்களூரு வருவர்.இந்நிலையில், அரண்மனை மைதானம் சுற்று வட்டார பகுதிகளில், இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, பெங்களூரு நகர போலீசார் வெளியிட்ட அறிக்கை:l மாநாட்டுக்கு வரும் பஸ், டெம்போ டிராவலர்கள், மைசூரிலிருந்து வருவோர், நாயண்டஹள்ளியிலிருந்து இடதுபுறம் திரும்பி, சுமனஹள்ளி, துமகூரு சாலை, கொரகுண்டேபாளையா, ஹெப்பால், மேக்ரி சதுக்கம் வழியாகவும்;l துமகூரு சாலையிலிருந்து வருவோர், கொரகுண்டேபாளையா, ஹெப்பால், மேக்ரி சதுக்கம் வழியாகவும்;l கனகபுராவிலிருந்து வருவோர் பனசங்கரி பஸ் நிலையம், ஜெயநகர் சவுத்என்ட் சதுக்கம், லால்பாக் மேற்கு நுழைவு வாயில், டவுன் ஹால், மைசூரு வங்கி சதுக்கம், அரண்மனை சாலை, வசந்த் நகர், ஜெயமஹால் சாலை வழியாகவும்;l பன்னரகட்டா சாலையிலிருந்து வருவோர், டெய்ரி சதுக்கம், லால்பாக் மெயின் கேட், டவுன் ஹால், அரண்மனை சாலை, வசந்த நகர், ஜெயமஹால் சாலை வழியாகவும்,l ஒசூர் சாலையிலிருந்து வருவோர், மடிவாளா, லால்பாக் மெயின் கேட், டவுன் ஹால், மைசூரு வங்கி சதுக்கம், அரண்மனை சாலை, வசந்த் நகர், ஜெயமஹால் சாலை வழியாகவும்;l ஓல்டு மெட்ராஸ் சாலையிலிருந்து வருவோர், கே.ஆர்.புரம், டின் பேக்டரி, நாகவாரா, ஹெப்பால், மேக்ரி சதுக்கம் வழியாகவும்;l பல்லாரி சாலையிலிருந்து வருவோர் தேவனஹள்ளி, கோகிலு சதுக்கம், கொடிகேஹள்ளி கேட், ஹெப்பால், மேக்ரி சதுக்கம் வழியாகவும்;l தொட்டபல்லாபூர் சாலையிலிருந்து வருவோர், எலஹங்கா காவல் நிலையம், பல்லாரி சாலை, ஹெப்பால், மேக்ரி சதுக்கம் வழியாகவும் மாநாட்டுக்கு செல்லலாம்.l கார், இரு சக்கர வாகனத்தில் வருவோர், அரண்மனை மைதானத்தின் திரிபுர வாசினி நுழைவு வாயில் வழியாக, ஜெயமஹால் சாலை வழியாக சென்று, வாகனங்கள் நிறுத்த வேண்டும்.l வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., வாகனங்கள், ரமண மகரிஷி சாலையின் கிருஷ்ண விஹார் மைதானத்தில் நிறுத்தலாம்.இன்று அதிகாலை, 4:00 மணியிலிருந்து மாநாடு முடியும் வரை, ரமண மகரிஷி சாலை, சர் சி.வி.ராமன் சாலை, பல்லாரி சாலை, ஹெப்பால் மேம்பாலம், மேக்ரி சதுக்கம், ஜெயமஹால் சாலை, தரளபாலு சாலை, எம்.ஜி.ஜெயராமன் சாலை, அரண்மனை சாலை, அரண்மனை கிராஸ் சாலை, வாட்டர் டேங்க் சதுக்கம், டி.சவுடய்யா சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், வாகன ஓட்டிகள், மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE