பொது செய்தி

தமிழ்நாடு

'குத்து' வாங்குவோருக்கு சிகிச்சை அளிக்க ஸ்பெஷல் 'டீம்'

Added : பிப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், தினமும் உள் மற்றும் வெளிநோயாளிகள் என, 5,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், கொரோனா மற்றும் டெங்கு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி, புத்தாண்டு சமயங்களில் வாண வேடிக்கைகளால் காயமடைந்து வருவோருக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு வார்டு அமைக்கப்படும்.அதேபோல், செட்டிபாளையத்தில்

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், தினமும் உள் மற்றும் வெளிநோயாளிகள் என, 5,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், கொரோனா மற்றும் டெங்கு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி, புத்தாண்டு சமயங்களில் வாண வேடிக்கைகளால் காயமடைந்து வருவோருக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு வார்டு அமைக்கப்படும்.அதேபோல், செட்டிபாளையத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க, அவசர சிகிச்சை பிரிவில், கூடுதல் படுக்கை மற்றும் டாக்டர் குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.டீன் காளிதாஸ் கூறுகையில்,''வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, விபத்து சிகிச்சை பிரிவில் கூடுதலாக, 10 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மயக்கமருந்தியல், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த டாக்டர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202112:15:04 IST Report Abuse
 Ram Pollachi ஆம்புலன்ஸ்க்கு வழி விடவும். சரிதானே எந்த ஒரு சிரி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X