அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராகுல் ராசி அப்படி: இல.கணேசன் கிண்டல்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:''ராகுல் வருகை ராசி காரணமாக, புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சி கவிழலாம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.திருப்பூரில், அவர் கூறியதாவது:தமிழக அரசு, அலுவலகப் பயன்பாட்டில், ஆங்கில சொற்களை தவிர்த்து, தமிழ் சொற்களை பயன்படுத்த உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. அ.ம.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் இடையே உள்ள பிரச்னையில், பா.ஜ., தலையிடாது. பல மாநிலங்களில்
 ராகுல் ராசி அப்படி: இல.கணேசன் கிண்டல்

திருப்பூர்:''ராகுல் வருகை ராசி காரணமாக, புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சி கவிழலாம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

திருப்பூரில், அவர் கூறியதாவது:தமிழக அரசு, அலுவலகப் பயன்பாட்டில், ஆங்கில சொற்களை தவிர்த்து, தமிழ் சொற்களை பயன்படுத்த உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. அ.ம.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் இடையே உள்ள பிரச்னையில், பா.ஜ., தலையிடாது. பல மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என்றால், இது எவ்வளவு துாரம் தவிர்க்க முடியாதது என்பது தெளிவாகிறது.

காங்., அரசு, விலைவாசி உயர்வை மறைத்து, கடன்களை அதிகரித்து விட்டது.அந்த அரசு விட்டுச் சென்ற, 24 லட்சம் கோடி ரூபாய் கடனில் பெரும் பகுதியை, மோடி அரசு திரும்ப செலுத்தியுள்ளது. அரசுக்கு வரி வருவாய் என்பது அவசியம்.புதுச்சேரியில் முதல்வர், தன் பெரும்பான்மையை சபையில் நிரூபிக்க வேண்டும். காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறினால், பா.ஜ., எவ்வகையிலும் பொறுப்பாகாது. ராகுல் வருகை ராசி காரணமாக கூட, அங்கு ஆட்சி கவிழலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X