மைசூரு மேயர் பதவியை பிடிக்க காங்., - பா.ஜ., மும்முரம்  | Dinamalar

மைசூரு மேயர் பதவியை பிடிக்க காங்., - பா.ஜ., மும்முரம்  

Added : பிப் 21, 2021
Share
மைசூரு மேயர் பதவியை பிடிக்க காங்., - பா.ஜ., மும்முரம் கிங் மேக்கரான ம.ஜ.த., வட்டாரத்தில் பெரும் குழப்பம்மைசூரு, பிப். 21-மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில், ம.ஜ.த.,வுடன் கைகோர்க்க, சித்தராமையா, 'பச்சை கொடி' காண்பித்துள்ளார். ஆனால், அவர்களின் கூட்டணியை முறிக்க, பா.ஜ., திரைமறைவில் செயல்படுகிறது. யாருடன் கைகோர்ப்பது என்ற குழப்பத்தில், ம.ஜ.த., உள்ளது. மைசூரு மாநகராட்சி

மைசூரு மேயர் பதவியை பிடிக்க காங்., - பா.ஜ., மும்முரம் கிங் மேக்கரான ம.ஜ.த., வட்டாரத்தில் பெரும் குழப்பம்மைசூரு, பிப். 21-மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில், ம.ஜ.த.,வுடன் கைகோர்க்க, சித்தராமையா, 'பச்சை கொடி' காண்பித்துள்ளார். ஆனால், அவர்களின் கூட்டணியை முறிக்க, பா.ஜ., திரைமறைவில் செயல்படுகிறது. யாருடன் கைகோர்ப்பது என்ற குழப்பத்தில், ம.ஜ.த., உள்ளது.

மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல், வரும், 24 ல் நடக்கவுள்ளது. ம.ஜ.த.,வுடன் கைகோர்த்து, ஆட்சி நிர்வாகத்தை பிடிக்க, பா.ஜ., திரைமறைவில் முயன்று வருகிறது. இதற்கிடையில், மைசூரில் முகாமிட்டுள்ள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, நேற்று காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.அப்போது, கவுன்சிலர்களின் ஆலோசனைப்படி, ம.ஜ.த.,வுடன் கைகோர்க்க முடிவு செய்யப்பட்டது. மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரமும் வகுக்கப்பட்டது. இதன் மூலம், மைசூரு மேயர் தேர்தல், சூடுபிடித்துள்ளது.

கூட்டத்துக்கு பின், சித்தராமையா கூறியதாவது:ம.ஜ.த., தானாக முன்வந்து, கூட்டணி அமைத்து கொள்ளும் பட்சத்தில், நான் தடுக்க மாட்டேன். ஆனால், பழைய ஒப்பந்தப்படி, காங்கிரசுக்கு மேயர் பதவி விட்டு கொடுக்க வேண்டும். துணை மேயர் பதவியை, அவர்கள் எடுத்து கொள்ளட்டும்.மேயர் பதவியை விட்டு கொடுத்தால் மட்டுமே, கூட்டணி அமைத்து கொள்ளும்படி, கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், சித்தராமையாவின் அவசர ஆலோசனையை அடுத்து, பா.ஜ., வட்டாரத்திலும் அக்கட்சி பிரமுகர்கள் ரகசிய திட்டம் தீட்டி வருகின்றனர்.

முதல்கட்ட பேச்சு முடிந்துள்ளது. பா.ஜ.,வும், தன் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசித்து வருகிறது. ஆனால், காங்கிரசுடன் கைகோர்ப்பதா, பா.ஜ.,வுடன் கைகோர்ப்பதா என்ற குழப்பத்தில் ம.ஜ.த., உள்ளது.மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலை பொறுத்த வரை, ம.ஜ.த., எடுக்கும் நிலைபாடு தான் முக்கிய பங்கு வகிக்கும். இதனால், மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது ம.ஜ.த., - காங்., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது...

..ஓட்டு போட தகுதி பெற்றவர்கள்: 74பெரும்பான்மைக்கு தேவை: 38கவுன்சிலர்கள்: 65காங்கிரஸ் :கவுன்சிலர்கள், 19; எம்.எல்.ஏ., 1, எம்.எல்.சி., 1பா.ஜ.,:கவுன்சிலர்கள், 18; எம்.பி., 1, எம்.எல்.சி., 2ம.ஜ.த.,:கவுன்சிலர்கள், 21, எம்.எல்.ஏ., 1, எம்.எல்.சி., 3எஸ்.டி.பி.ஐ.,:கவுன்சிலர்கள் - 3பகுஜன் சமாஜ்:கவுன்சிலர் - 1சுயேச்சைகள் - 3

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X