பொங்கலுார்:கால மாற்றத்தால் பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் அறிமுகமான பின் மண்பாண்ட தொழிலுக்கு மவுசு குறைந்தது.பதநீர் இறக்குவதற்கு மண்ணில் செய்யப்பட்ட பானைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சமீப காலங்களில் பதநீர் இறக்கி கருப்பட்டி தயாரிப்பதும் குறைந்துவிட்டது. தற்போது கோவில் திருவிழாவின் போது மட்டும் குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடை உருவ பொம்மைகள், பொங்கல் பானைகள், அகல் விளக்குகள் என சொற்ப அளவிலான பொருட்களே விற்பனையாகின்றன.இதனால், மண்பாண்ட கலைஞர்களின் வருமானம் குறைந்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பலர் வேறு தொழில் அல்லது வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். தற்போது வெகுசிலரே மண்பாண்டம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய போட்டி சூழ்நிலையில் அவர்களுக்கும் போதிய வருமானம் கிடைப்பதில்லை.மண் பாண்டம் தயாரிக்க தேவையான மூலப்பொருளே மண்தான். மண் எடுப்பதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. முன்பு போல் எளிதாக மண் எடுத்து வர முடிவதில்லை.மண் எடுத்து வர அதிக பொருட் செலவு ஆகிறது. மண் எடுப்பதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் நிலவுகிறது. இதனால் தொழில் நசிந்து மண்பாண்டக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, தங்கள் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு தேவையான மண் எளிதாக கிடைக்க அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மண்பாண்ட கலைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE