பொது செய்தி

இந்தியா

ரூ.314 கோடியில் ரயில்வே டர்மினல்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : தென்மேற்கு ரயில்வேதுறை, பெங்களூரின் பையப்பனஹள்ளியில், 314 கோடி ரூபாய் செலவில், அதிநவீனமாக கட்டப்பட்ட, ரயில்வே டர்மினல், திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இம்மாதம் இறுதியில், திறந்து வைக்கப்படும் வாய்ப்புள்ளது. பெங்களூரின், சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் பயணியர் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில்,

பெங்களூரு : தென்மேற்கு ரயில்வேதுறை, பெங்களூரின் பையப்பனஹள்ளியில், 314 கோடி ரூபாய் செலவில், அதிநவீனமாக கட்டப்பட்ட, ரயில்வே டர்மினல், திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இம்மாதம் இறுதியில், திறந்து வைக்கப்படும் வாய்ப்புள்ளது.

பெங்களூரின், சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் பயணியர் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில், பையப்பனஹள்ளியில், 314 கோடி ரூபாய் செலவில், அதிநவீன. ரயில்வே டர்மினல் கட்டப்பட்டுள்ளது.இதற்கு, 'விஸ்வேஸ்வரய்யா டர்மினல்' என பெயர் சூட்டப்பட்டது. இதன் வெளிப்புறம், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.குளிர்சாதன வசதி, பிளாட்பாரம்கள், ஓய்வறை, கழிப்பறை, விசாலமான வாகன பார்க்கிங் உட்பட, அனைத்து வசதிகளும் உள்ளது.

இங்குள்ள வசதிகள், பயணியருக்கு விமான நிலையத்தின், அனுபவத்தை அளிக்கும். ஒவ்வொரு பிளாட்பாரம்கள், 15 மீட்டர் அகலம்; 600 மீட்டர் நீளமுள்ளது. டர்மினல் மற்றும் பிளாட்பாரம் முழுவதும், எல்.இ.டி., பல்புகள் உள்ளது. அனைத்து பிளாட்பாரம்களை இணைக்க வசதியாக, இரண்டு சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு வசதியும் உள்ளது.'விஸ்வேஸ்வரய்யா டர்மினல்' இம்மாதம் இறுதியில், திறந்து வைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X