படுகுழியில் விழாமல் இருக்க வாழைக்கன்று நட்ட மக்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

படுகுழியில் விழாமல் இருக்க வாழைக்கன்று நட்ட மக்கள்!

Added : பிப் 21, 2021
Share
பல்லடம்:ரோட்டில் இருக்கும் குழியை உணர்த்த, வாழைக்கன்று நட்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம் -- பொள்ளாச்சி ரோடு, கேரளாவை இணைக்கும் ரோடாகவும் உள்ளது. இரு மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலை என்பதால், இவ்வழியாக கன்டெய்னர், மணல் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் வந்து செல்கின்றன.போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், காமநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப்
 படுகுழியில் விழாமல் இருக்க வாழைக்கன்று நட்ட மக்கள்!

பல்லடம்:ரோட்டில் இருக்கும் குழியை உணர்த்த, வாழைக்கன்று நட்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம் -- பொள்ளாச்சி ரோடு, கேரளாவை இணைக்கும் ரோடாகவும் உள்ளது. இரு மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலை என்பதால், இவ்வழியாக கன்டெய்னர், மணல் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் வந்து செல்கின்றன.போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், காமநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் படுகுழி ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் வாழை மரக்கன்றை நட்டு வைத்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'படுகுழியை மூடி விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X