மைசூரு : ''ஒவ்வொரு வீட்டிலும், நான்கு பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. அன்னபாக்யா அரிசியால், பலர் கோடீஸ்வரர்கள் ஆகினர்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றம் சாட்டினர்.
மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:சித்தராமையா வளர்ச்சிக்காக பாடுபட்டு, நான் பாழானேன். அவரை ம.ஜ.த.,விலிருந்து, தேவகவுடா வெளியேற்றிய போது, நான் பலரின் கை, கால்களை பிடித்து, சித்தராமையாவை, காங்கிரசுக்கு அழைத்து வந்தேன்.அவர் ஆட்சி காலத்தில்தான், குருபர் சமுதாயத்துக்கு அதிக பாதிப்பு நடந்தது. அகங்காரம், ஆணவத்தால், ஆட்சி நடத்த முடியாது.சமீப நாட்களாக மக்கள் விசிலடிக்க வேண்டும், கைத்தட்ட வேண்டும் என்பதற்காக, அவர் உரையாற்றுகிறார்.தேர்தலுக்கு இரண்டரை ஆண்டு இருக்கும் போதே, நாங்களே ஆட்சிக்கு வருவோம் என்கிறார். இவருக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பர்.முன்னாள் முதல்வர் சித்தராமையா, 10 கிலோ அரிசி வழங்கட்டும்.
தகுதியானவருக்கு, கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவரது தலைமை யினால்தான், ஆட்சி பறி போனது,மாநிலத்தில், பி.பி.எல்., ரேஷன் கார்டுகளை குறைக்க வேண்டும். மாநிலத்தில், 85 சதவீதம் பி.பி.எல்., கார்டுகள் உள்ளது. அப்படியென்றால், எந்த திசையில் செல்கிறது. இதை யாரும் கேட்கக்கூடாதா.ஒவ்வொரு வீட்டிலும், நான்கு பி.பி.எல்., கார்டுகள் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. அன்னபாக்யா அரிசியால், பலர் கோடீஸ்வரர்கள் ஆகினர்.கர்நாடகாவின் அரிசி, தமிழகம், ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இது பற்றி உணவுத்துறை அதிகாரிகள் கவலைப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE