பெங்களூரு : கர்நாடகாவின் துறை முகங்கள் மேம்பாடு, ரயில்வே திட்டங்கள், பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டத்தை விரைவில் செயல்படுத்த, நிதியுதவி செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தினார்.
நிதி ஆயோக், 6வது ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்தது. டில்லியில் இருந்தவாறே, அவர், அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார்.கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:l பத்ரா மேலணை, கிருஷ்ணா மேலணை திட்டங்களை, தேசிய திட்டங்களாக அறிவிப்பது அவசியம்.l வெவ்வேறு நீர்ப்பாசன திட்டங்களை நவீனப்படுத்த, 6,673 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.l தனியார் ஒத்துழைப்புடன் மாநிலத்தின், மூன்று துறை முகங்கள் மேம்பாடு, ரயில்வே திட்டங்கள் இணைந்து செயல்படவும், பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உதவுவது.
l சட்ட சிக்கல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்தால், சில அடிப்படை திட்டங்கள் தாமதமாகிறது. எனவே, நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகளை, விரைவில் முடித்து வைக்க, தனி விதிமுறை தயாரிப்பது முக்கியம்.l புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்த, தேவையான பொருளாதார நிதியுதவி.l அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இணைய வசதி ஏற்படுத்த, ஓ.எப்.சி., நெட்ஒர்க் வழங்க, 4,300 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.l கர்நாடகா அரசு சார்பில், சத்துணவு குறைபாட்டால் அவதிப்படும் குழந்தைகளுக்காக, 16 மாவட்டங்களின், 67 தாலுகாக்களில் சிறப்பு சத்துணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.l ஆயுஷ் துறையை மேம்படுத்த, பொது சுகாதார கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.l மாநிலத்தில், 4,607 சுகாதாரம், நல்வாழ்வு மையங்கள் செயல்படுகின்றன.l சுய சார்பு திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், நவீன சிகிச்சை வசதி செயல்படுத்தப்படும்.l பிரதமர், மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ், 3,409 மருத்துவமனைகள் பதிவு செய்து கொண்டுள்ளன. நாட்டிலேயே, கர்நாடகாவில் தான், அதிக மருத்துவமனைகள் பதிவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.l ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ், 2,753 கோடி ரூபாய் செலவில், 13 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.l சேவா சிந்து திட்டத்தின் கீழ், 750 சேவைகள், காகிதம் இல்லாமல் வழங்கப்படுகின்றன.l மாநிலத்தின், 114 பின் தங்கியுள்ள தாலுகாக்கள், ஒருங்கிணைந்து செயல்படுத்த நிதி ஆயோக்கின், 49 விதிமுறைகளும் பொருந்துகின்றன.l சுய சார்பு திட்டத்தின் கீழ், கூடுதலாக விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், ஆன்லைன் மூலம் சந்தை வசதி ஏற்படுத்த, முடிவு செய்துள்ளோம்.l விஞ்ஞான ரீதியில், விவசாய சந்தை தகவல் அமைத்து, அதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.l அந்தந்த பகுதிகளில் விளைவியும் உணவு பொருட்களுக்கு ஏற்ப, தகவல் மையங்கள் அமைத்து, உள்ளூர் கால் நடைகள் பாதுகாக்கவும் திட்டமிட்டள்ளோம்;l சிறந்த உணவு முறை பழக்கத்தை செயல்படுத்த, சத்தான உணவு கிடைக்க, சிறு தானியங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய, அரசு ஊக்கமளிக்கிறது.l நாட்டிலேயே கர்நாடகாவில் தான் குறைந்த அளவில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. அதாவது, 3.6 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலையில்லை.l திறமை அபிவிருத்தி பயிற்சி அளிக்க, வெவ்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துகிறோம்.l புதிய தொழில் கொள்கை, 2020 - 25 மூலம், உள்ளூர் உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தை ஏற்படுத்த, ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.l கொரோனா தொற்று பரவலுக்கு இடையிலும், மாநிலத்தின் நிதி நிலை, விதிமுறைக்கு உட்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE