பொது செய்தி

தமிழ்நாடு

எதிர்கால தொழில்முனைவோர்... திருப்பூர் குட்டீஸூக்கு, கத்துக்கொடுக்கணுமா!

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூருக்கு போனால் எப்படியாவது பொழைச்சுக்கலாம்னு பல ஊர்ல இருந்தும் மக்கள் இங்கே படையெடுக்குறாங்க. அந்தளவுக்கு இங்கே சிறு, குறு தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்குது... 'பிசினஸ்'ங்குற விஷயம் எல்லோரிடமும் ஊறிக்கிடக்க, நாங்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டனர் இவ்வூர் குட்டீஸ்கள்.வருங்கால தலைமுறையினருக்காக, 'இளம் தொழில்முனைவோர்' என்ற
 எதிர்கால தொழில்முனைவோர்... திருப்பூர் குட்டீஸூக்கு, கத்துக்கொடுக்கணுமா!

திருப்பூருக்கு போனால் எப்படியாவது பொழைச்சுக்கலாம்னு பல ஊர்ல இருந்தும் மக்கள் இங்கே படையெடுக்குறாங்க. அந்தளவுக்கு இங்கே சிறு, குறு தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்குது... 'பிசினஸ்'ங்குற விஷயம் எல்லோரிடமும் ஊறிக்கிடக்க, நாங்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டனர் இவ்வூர் குட்டீஸ்கள்.வருங்கால தலைமுறையினருக்காக, 'இளம் தொழில்முனைவோர்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிலரங்கு மற்றும் கண்காட்சி அத்வைதா இன்டர்நேசனல் பள்ளியில் சமீபத்தில் நடந்தது. மொத்தம், 18 ஸ்டால்கள். ஒவ்வொன்றிலும் குட்டீஸ் தங்களுக்கே உண்டான கலைத்திறன்களுக்கு மெருகூட்டி பல்வேறு கைவினைப்பொருட்களை வடிவமைத்து காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர்.பேப்பர் அட்டையை கொண்டு உருவாக்கிய சுவர் அலங்கார பொருட்கள், டேபிள் பென்சில் ஸ்டாண்ட், களிமண்ணை குழைத்து வடிவமைத்த சமையல் விளையாட்டு சாமான்கள், புத்தர், கிருஷ்ணன் சிலைகள், பட்டுநுாலால் ஆன வளையல், பேன்சி ரகங்கள் என, பார்வையாளர்களை அசரடித்துவிட்டனர். பானை செய்தல், உணவு தயாரித்தல், ஆபரணங்கள் செய்தல் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.வரவு- செலவு கணக்குகளை சுயமாக கணக்கிட்டு அசத்தினர். சிறிய முதலீட்டில் தனித்திறன்களால் சுயதொழில் துவங்கலாம் என்பதை குட்டீஸ்கள் கற்றுக்கொண்டிருக்க இன்னொரு புறம் இயற்கை வேளாண்மை குறித்து, 'ஆஸ்க் பார்ம் பிரஷ்' அமைப்பு நிறுவனர்கள் அஷ்வத், ஸ்வரன், கிரண், சூர்யா ஆகியோர் விளக்கமளித்து கொண்டிருந்தனர்.அவர்கள், 'வேளாண்மை செய்யும்போது, நுண்ணுயிரிகள் கார்பனை மண்ணில் தக்கவைத்து காற்றில் கலப்பதை தடுக்கின்றன. இயற்கையை சேதப்படுத்தும் பிரச்னைகளுக்கு கரிம விவசாயமே சிறந்த தீர்வு' என்றதும், மாணவர்களுக்கு, 'ஏரும், கலப்பையும் ஏந்தி கொண்டிருப்பது போலான பிம்பம்', ஒரு வினாடி கண்முன்னே வந்து போயிருக்கும். அந்தளவு ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X