பொது செய்தி

தமிழ்நாடு

பதற்றமான 7,000 ஓட்டுச்சாவடிகள் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கடலுார்:''சட்டசபை தேர்தலில் தமிழகத்தில், 7,000 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப் பட்டுள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரசேகர சகாமுரி முன்னிலை
 பதற்றமான 7,000 ஓட்டுச்சாவடிகள் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கடலுார்:''சட்டசபை தேர்தலில் தமிழகத்தில், 7,000 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப் பட்டுள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரசேகர சகாமுரி முன்னிலை வகித்தார்.ஓட்டுச்சாவடி மைய பாதுகாப்பு, மக்கள் ஓட்டளிக்கத் தேவையான வசதிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் ஓட்டளிப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுபதிவு மையங்கள் பிரிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 7,000 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப் பட்டுள்ளன. இளம் வாக்காளர்கள் தவறாமல் ஓட்டளிப்பது குறித்து, கல்லுாரிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து, உள்ளூர் தொலைக்காட்சி, எப்.எம்., ரேடியோக்களில் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X