மைசூரு : ''ராமர் கோவில் கட்ட, மக்கள் நன்கொடை வழங்குகின்றனர். நானும் இந்நாட்டின் பிரஜை என்பதால் கணக்கு கேட்கும் அதிகாரம் எனக்குள்ளது,'' என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:நான் பிறந்த ஊரில், ராமர் கோவில் கட்டி வருகிறேன். இதற்காக மக்கள், நன்கொடை அளிக்கின்றனர். அனைத்து இடங்களிலும், ராமர் கோவில் கட்டுகின்றனர். இதில் தவறென்ன.கடவுள் மக்களின் பயம், பக்தி, ஆன்மிக நம்பிக்கையின் அடையாளம். அதை சிலர், அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர்.ராமர் கோவில் கட்ட, மக்கள் நன்கொடை வழங்குகின்றனர். அது பா.ஜ.,வுக்கு அல்ல. எனவே, கணக்கு கேட்கும் அதிகாரம் எனக்குள்ளது. ஏனென்றால், நானும் இந்நாட்டின் பிரஜை.நான், நன்கொடை கொடுத்தாலும், இல்லையென்றாலும், கணக்கு காண்பிப்பது அவர்களின் கடமை.
இதற்கு முன், நன்கொடை வசூலித்ததற்கு, கணக்கு காண்பிக்கவில்லை.நான் முதல்வராக இருந்த போது, செயல்படுத்திய திட்டங்களை, தற்போதைய அரசு நிறுத்தியுள்ளது. அன்னபாக்யா திட்டத்துக்கு, வேட்டு வைத்துள்ளனர்.ஏழு கிலோ அரிசி வழங்கப்பட்டது. அடுத்த முறை, நாங்கள் ஆட்சிக்கு வருவோம். வந்தால்,பத்து கிலோ அரிசி வழங்குவோம்.இந்த அரசு, ஓட்டை பஸ் போன்றது. எடியூரப்பா, டிரைவிங் தெரியாத முதல்வர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE