பெங்களூரு : பொறியியல், கால்நடை மருத்துவம், யோகா உட்பட வெவ்வேறு படிப்புகளுக்கான, சி.இ.டி., நுழைவு தேர்வு, ஜூலை, 7, 8 ல் நடக்கிறது.
கர்நாடகாவில் பொறியியல், விவசாய விஞ்ஞானம், கால்நடை மருத்துவம், யோகா, நேச்சுரோபதி, பி - பார்ம், டி - பார்ம் ஆகிய படிப்புகளுக்கு, கர்நாடகா தேர்வு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும், சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகின்றன.2021க்கான சி.இ.டி., தேர்வுகள், நேற்று அறிவிக்கப்பட்டன.இது குறித்து துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, பெங்களூரு மல்லேஸ்வரத்திலுள்ள கர்நாடகா தேர்வு ஆணைய அலுவலகத்தில், நேற்று கூறியதாவது:இந்தாண்டுக்கான, சி.இ.டி., நுழைவு தேர்வு, ஜூலை, 7, 8 ல் நடக்கிறது.
7, காலை, 10:00 முதல், 11:50 மணி வரை, உயிரியல்; மதியம், 2:30 முதல், 3:50 மணி வரை, கணிதம்,8, காலை, 10:00 முதல், 11:50 மணி வரை இயற்பியல்; மதியம், 2:30 முதல், 3:50 மணி வரை, வேதியியல் நுழைவு தேர்வு நடக்கிறது.வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, 9, காலை, 11:30 முதல் மதியம், 12:30 மணி வரை பெங்களூரில் கன்னட மொழி தேர்வு நடக்கிறது.வெவ்வேறு மாநிலங்களின், பி.யு.சி., தேர்வுகளை கருத்தில் கொண்டு, சி.இ.டி., நுழைவு தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE