சென்னை:'அனைத்து மாவட்டங்களிலும், வரும், 2௫ம் தேதி, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படும்' என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள், ஓட்டுச்சாவடிகள் நிலையிலான களப்பணிகள் போன்றவை குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், ௨௫ம் தேதி காலை, 11:00 மணிக்கு, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கும்.கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலர்கள் பங்கேற்பர்.
தேர்தலை சந்திக்க, இதுவரை செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். கூட்டம் முடிவில், ஒவ்வொரு தொகுதியிலும், களப்பணிகள் மேற்கொள்ள உள்ள நிர்வாகிகள், களப் பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE