சென்னை:தி.மு.க.,வில் விருப்ப மனு வாங்குவதற்கான தேதி, 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், பிப்., 17 முதல், 24 வரை, விருப்ப மனு பெற்று விண்ணப்பிக்கலாம் என, கட்சி தலைமை அறிவித்திருந்தது.தினமும் ஏராளமானோர், விருப்ப மனு வாங்கிச் செல்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், விருப்ப மனு வாங்கும் தேதி, வரும், 28 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. போட்டியிட விரும்புவோர், 1,000 ரூபாய் கொடுத்து, விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.பொதுத் தொகுதியில் போட்டியிட, 25 ஆயிரம் ரூபாய்; மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட, விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு மட்டும், கட்டணம் திருப்பி தரப்படும் என, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE