சமீபத்தில், சாத்துார் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில், 20 பேர் பலியாகினர். பட்டாசு ஆலைகளில், விபத்துகள் தொடர் கதையாக இருக்கின்றன.திருப்பூர் மாவட்டத்தில், பட்டாசு ஆலைகள் இல்லையென்றாலும், தீவிபத்துக்கான வாய்ப்புகள் உள்ள ஆலைகள் ஏராளமாக இருக்கின்றன.சமீபத்தில், வெள்ளகோவில் அருகே, நுாற்பாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், இரு தொழிலாளர்கள் பலியாகினர். இது, அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது.சிவகாசியின் தட்பவெப்ப நிலை, பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு உகந்ததாக அமைகிறது. இதேபோல், திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில், நிலவும், தட்பவெப்பம், ஜவுளி மற்றும் பின்னலாடை தொழிலுக்கு உகந்ததாக இருக்கிறது.தீவிபத்துகள், தடுக்க முடியாதவையோ, தவிர்க்க முடியாதவையோ அல்ல; விழிப்புணர்வு நடவடிக்கைகள் இதற்கு அவசியமாகின்றன.வழக்கமாக தீவிபத்துகள் நிகழும்போது, வழக்குப்பதிவு, கைது நடவடிக்கைகள், காரணம் கண்டறிதல், நடத்தப்படும் அதிரடி ஆய்வுகள், எச்சரிக்கை தரும் அறிவிப்புகள், பாதுகாப்பு அறிவுரைகள் போன்றவை எல்லாம், குறுகிய கால நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்.எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள ஆலைகளில், பயிற்சி பெறாத ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவது கூட, தீவிபத்துகளுக்கு வழிவகுக்கிறது. மின் இணைப்புகள் பொருத்துதலில் கவனம் முக்கியம். மின்கசிவு, பெரும்பாலான தீவிபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.பல்லடத்தை சேர்ந்த சுல்ஜர் தறி உரிமையாளர்கள், தீயணைப்பு நிலையங்களில், நவீன கருவிகள் தேவை என்பதை வலியுறுத்திஇருக்கின்றனர். தீவிபத்து நிகழும்போது, தொழிலாளருக்கு மட்டுமல்லாமல், உரிமையாளர் தனக்குரிய முழுமையான நிதியாதாரத்தை இழந்து நிர்க்கதியாகிவிடுகிறார் என்ற உண்மையை, இவர்கள் உரக்கச் சொல்லியிருக்கின்றனர்.தீயணைப்பு வீரர்களை உடனடியாக அழைப்பதற்கு, செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், தீயணைப்பு நிலையங்களில், போதுமான அளவு நவீன கருவிகள் இல்லாததையும், இரு இடங்களில் விபத்துகள் நிகழும்போது அவற்றை எதிர்கொள்வதற்கு இயலாத சூழல் நிலவுவதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஊழியர்களும் போதுமான அளவு இருப்பதில்லை.பல நேரங்களில், நிஜம் சுடுகிறது! நிஜத்தை மாற்றலாம், நாமும், அரசும் முயற்சித்தால்...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE