கமல் கட்சியில் இன்று முதல் மனு தாக்கல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சியில் இன்று முதல் மனு தாக்கல்

Added : பிப் 21, 2021
Share
சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியில், இன்று முதல், விருப்ப மனு தாக்கல் துவங்குகிறது.நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி, மூன்றாண்டு முடிந்துள்ளது. நான்காம் ஆண்டு துவக்க விழா மாநாடு நடத்த, கமல் திட்டமிட்டுஇருந்தார். போலீஸ் அனுமதி கிடைக்காததால், மார்ச், 7ம் தேதிக்கு, மாநாட்டை ஒத்தி வைத்துள்ளார். சென்னை, தாம்பரம் அருகே, தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில்,

சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியில், இன்று முதல், விருப்ப மனு தாக்கல் துவங்குகிறது.

நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி, மூன்றாண்டு முடிந்துள்ளது. நான்காம் ஆண்டு துவக்க விழா மாநாடு நடத்த, கமல் திட்டமிட்டுஇருந்தார். போலீஸ் அனுமதி கிடைக்காததால், மார்ச், 7ம் தேதிக்கு, மாநாட்டை ஒத்தி வைத்துள்ளார்.

சென்னை, தாம்பரம் அருகே, தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடக்கிறது. இதில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர். மேலும், கூட்டணி முடிவுகளை, கமல் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X