திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது| Dinamalar

திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Added : பிப் 21, 2021
Share
புலிகேசிநகர் : தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க, திருட்டில் ஈடுபட்ட இருவரை, புலிகேசி நகர் போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டு கரன்சி உட்பட, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.பெங்களூரு, ஆடுகோடி, லக்கசந்திராவில் வசிக்கும் நஜிம் ெஷரிப், 41, ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவரது நண்பர், சுத்தகுன்டேபாளையாவின், நியூ குரப்பன பாளையாவில்

புலிகேசிநகர் : தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க, திருட்டில் ஈடுபட்ட இருவரை, புலிகேசி நகர் போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டு கரன்சி உட்பட, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.பெங்களூரு, ஆடுகோடி, லக்கசந்திராவில் வசிக்கும் நஜிம் ெஷரிப், 41, ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவரது நண்பர், சுத்தகுன்டேபாளையாவின், நியூ குரப்பன பாளையாவில் வசிக்கும் முகமது ஷபிவுல்லா, 41, கிரானைட் தொழில் செய்கிறார். கொரோனாவுக்கு பின், இவர்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டத்தை சமாளிக்க, பணத்தேவை இருந்ததால், திருட்டில் ஈடுபட, நஜிம் ெஷரிப் திட்டமிட்டார்.அப்போதுல அவருக்கு, காக்ஸ்டவுனில் வசிக்கும், பணக்கார தோழி நினைவுக்கு வந்தார். இவரது வீட்டில் திருட முடிவு செய்தார்.

இதற்கு முகமது ஷபிவுல்லாவிடம் உதவி கேட்டார். அவருக்கும் பணத்தேவை இருந்ததால், சம்மதித்தார்.அவ்வப்போது, தோழியின் வீட்டுக்கு சென்று வந்த நஜிம், எப்படியோ அவர் வீட்டு சாவியை திருடி வந்து, 'டூப்ளிகேட்' சாவி தயாரித்தார்.ஜன., 12ல் தோழியின் அண்ணன் உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை பயன்படுத்திக்கொண்ட நஜிம், தோழியுடன் மருத்துவமனையில் இருந்து கொண்டார்.நண்பர் முகமது ஷபிவுல்லாவை, தோழி வீட்டுக்கு அனுப்பினார். அதன்படி முகமது ஷபிவுல்லா, காக்ஸ்டவுனுக்கு சென்று, தோழி வீட்டின் பூட்டை உடைத்து, தங்கநகைகளை திருடினார்.வீடு முழுவதும் மிளகாய் பொடி துாவி விட்டு, வீட்டு முன்பிருந்த, இரு சக்கர வாகனத்துடன் தப்பியோடினார். ஜன., 13, இரவு, மருத்துவமனையிலிருந்து, திரும்பிய அப்பெண், பூட்டு உடைப்பட்டிருப்பதை கண்டு, உள்ளே சென்று பார்த்தார்.தங்கநகைகள், இரு சக்கர வாகனம் திருடு போனதை கண்டு, புலிகேசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.விசாரணை நடத்திய போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், முகமது ஷபிவுல்லா, நஜிமை கைது செய்தனர். வெளிநாட்டு கரன்சி உட்பட, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X