பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், 2017ல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 26 ஆயிரத்து, 460 பேர் மீதான வழக்குகளை கைவிட, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.கடந்த, 5ம் தேதி, சட்டசபையில், அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டார். '2017ல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. 'சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, பல்வேறு வழக்குகள்
 ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்

சென்னை:தமிழகத்தில், 2017ல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 26 ஆயிரத்து, 460 பேர் மீதான வழக்குகளை கைவிட, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த, 5ம் தேதி, சட்டசபையில், அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டார். '2017ல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. 'சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இவற்றில், காவலர்களை தாக்கியது, தீ வைப்பு போன்ற வழக்குகளை தவிர, மற்றவை திரும்பப் பெறப்படும்' என, தெரிவித்தார்.


அரசாணை

அதன்படி, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக பதியப்பட்ட, 308 வழக்குகளை திரும்பப் பெற, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக, 26 ஆயிரத்து, 460 பேர் மீது, 308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 281 வழக்குகள், போலீஸ் விசாரணை நிலையில் உள்ளன; 27 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.


நடவடிக்கை

இவற்றில், போலீஸ் விசாரணையில் உள்ள வழக்குகள், மேற்கொண்டு விசாரணையின்றி கைவிடப்படும். நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில், வழக்கை திரும்பப் பெற, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.சில சம்பவங்களில், ரயில்வே சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில், மத்திய அரசு அனுமதி பெற்று, வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X