கோலார் மாவட்டத்தில், மூன்று நாட்கள் மழை தொடரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோலார் மாவட்ட நிர்வாக அலுவலகம் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி உள்ளது.
மழை பாதிப்புக்கு, கட்டுப்பாட்டு அறை எண், 1077 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்காக, இரு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவிக்கு, கோவிந்தராஜ் - 97400 50061; மஞ்சுநாத் - 91415 77499 ஆகிய மொபைல் எண்களில் தொடர்புக்கொள்ளலாம்.விஷம் குடித்து பெண் சாவுமாலுார், கோபசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 37. இவரது மனைவி ரமாதேவி, 32. இவர்களுக்கு திருமணமாகி, 12 ஆண்டுகளாகிறது. பெற்றோர் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு, அடிக்கடி மனைவியை, கணவர் தொந்தரவு கொடுத்து வந்தார். பல முறை பணமும் கொடுத்துள்ளார்.
மனம் நொந்திருந்த மனைவி, 18 ல், வீட்டில் விஷம் குடித்தார். கோலார் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.வரதட்சணை கொடுமையால், தன் மகள் இறந்ததாக,அவரது பெற்றோர், மாஸ்தி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.சத்ரபதி சிவாஜி ஜெயந்திவிஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சத்ரபதி சிவாஜி ஜெயந்தி, தங்கவயல், பிரிட்சர்ட் ரோடு, வாஜ்பாய் சதுக்கத்தில்நேற்று கொண்டாடப்பட்டது.விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்ரீதர் ராவ் சிந்தியா,மாலை அணிவித்து பூஜைகள் செய்தார்.அவர் பேசியதாவது:சத்ரபதி சிவாஜியின், 391 வது ஜெயந்தி விழாகொண்டாடப்படுகிறது.
முதன் முதலில் கொண்டாடியவர் ஜோதிராவ் புளே. மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது போன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சவிதா மகரிஷி விழாபங்கார்பேட்டை, பளமந்தி கிராமத்தில், சவிதா மகரிஷி ஜெயந்தி விழா நேற்று நடந்தது.அவர் பேசியதாவது:பளமந்தி சுற்றுப்புற பகுதிகளில், பெரும்பாலும் மராத்தியர்கள் உள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள எரகோள் அணைக்கு, சத்ரபதி சிவாஜி பெயர் சூட்ட வேண்டும் என கர்நாடக அரசை வலியுறுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயி தற்கொலைமுல்பாகல், குடிபள்ளி கிராமத்தில், கடன் தொல்லையால், விவசாயி ராமப்பா, 65, என்பவர், தன் பத்து ஏக்கர் நிலத்தில், நீர்ப்பாசன வசதி செய்ய, கடன் வாங்கி, பல ஆழ்துளை கிணறுகள் அமைத்தார். ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. பயிர் செய்ய முடியவில்லை. வாங்கிய கடன், வட்டி செலுத்த முடியவில்லை. மனம் நொந்த அவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பிரம்மோற்சவம்மாலுார், குடியனூர் சொன்னப்பனஹள்ளி கிராமம், பசவேஸ்வர சுவாமி, சந்திர மவுலீஸ்வரர் சுவாமி பிரம்மோற்சவம் நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்திர மவுலீஸ்வரர் ஊர்வலமாக வந்தார். வழிநெடுகிலும்பக்தர்கள் பூஜைகள் செய்தனர்.ரத உற்சவம்கோலார், அரபி கொத்தனுார் பிரசன்ன சோமநாதேஸ்வரர் சுவாமி ரத உற்சவம் நேற்று நடந்தது .உற்சவத்தை ஒட்டி, கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடந்தது. இதை தொடர்ந்து, ரத உற்சவம் நடந்தது. வெவ்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றம்கோலார் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கோலார் பழைய பஸ் நிலையம் அருகில் ஷெட் அமைத்து பூக்கடைகள் நடத்தப்பட்டு வந்தது. இக்கடைகள் அகற்றப்பட்டது. தங்களுக்கு வியாபாரம் செய்ய, தனி இடம் ஒதுக்குமாறு பூக்கடைக்காரர்கள் கோரினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE