'என் பையனுக்கு, 15 வயசு தான் ஆகுது... பைக், இப்பவே நல்லா ஓட்டுவான்... ஸ்கூலுக்கு கூட அதுலதான் போறான். காரும் நல்லா ஓட்றான்' என்று பெற்றோர் தம்பட்டம் அடித்து கொள்வதைப் பல வீடுகளில், பார்க்க முடிகிறது.டிரைவிங் லைசென்ஸ் பெற, 18 வயதாகியிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோது, பைக் ஓட்டுவதே தவறு; அப்படியிருக்க, இதில் பெருமிதம் கொள்வது முறையானதாக இருக்குமா!சாலை விதிமீறல்கள் அதிகரிப்பதற்கு, இது கூட அடிப்படைக் காரணமாக இருக்கிறது. திருப்பூர் போன்ற நகரங்களில், சிறுவர், சிறுமிகள், இரு சக்கர வாகனங்களில், சுற்றி வருவது, அன்றாடம் காணக்கூடியதாக இருக்கிறது. சிறுவர் இயக்கிய கார்கள், விபத்தை சந்தித்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.டூவீலர் பயன்பாடு அதிகரிப்புஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியது. இருசக்கர வாகனங்களே கைகொடுத்தன. ஊரடங்கு தளர்வுக்கு பின், தற்போதும், இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரில், 35 சதவீதத்தினர், இருசக்கர வாகன ஓட்டிகள் என்பது கவலையளிக்கிறது.சாலை விபத்துகளில், உலக நாடுகளில், நம் நாடு முதலிடத்தில் உள்ளது என்பது, பெருமைக்குரிய விஷயம் அல்ல.சாலை விபத்துகளில் உயிரிழப்போரில், ஐம்பது சதவீதத்தினர் இளைஞர்களாகவும் இருக்கின்றனர். விபத்தில் சிக்கி காயமடைவோரில் பலர், சுய உழைப்புத்திறனை இழக்க ேவண்டிய நிலையில் உள்ளனர். அவர்கள், வீட்டுக்கும், சமுதாயத்துக்கும் சுமையாக மாறுவதோடு, குடும்ப பொருளாதாரத்தையும் முடக்குகிறது.விபத்துகள் உயர்வது ஏன்!வரும் 2030க்குள், சாலை விபத்துகளைப் பாதியாக குறைக்க, உலக நாடுகள் சபதமெடுத்துள்ள நிலையில், நம் தேசத்தால், இது சாத்தியமா என்பது தெரியவில்லை. இதற்கு காரணம்,ஆண்டுக்கு ஆண்டு, விபத்து எண்ணிக்கை உயர்வது தான்.மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அபராத தொகை கடுமையான போதும், வாகனத்தணிக்கைகள், சோதனைகள் மட்டுமே, விபத்துகளைத் தடுக்க முடிவதில்லை. சாலை விதிமீறல்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை.டிரைவிங் லைசென்ஸ் இன்றி இயக்குவோர் அதிகரிக்கின்றனர். வாகனங்கள் வைத்திருக்கும், 25 சதவீதத்தினரிடம் லைசென்ஸ் கிடையாது என்ற பேருண்மை, நம்மை அதிரத்தான் வைக்கிறது.காட்சிப்பொருளாய் கேமராநாட்டில் உள்ள, அனைத்து வகை வாகனங்கள் 30 கோடி. இவற்றை உரிமம் இல்லாதவர்கள் பலர் இயக்கி வருகின்றனர். மாநகர மற்றும் நகர சாலைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், பல இடங்களில், இவை காட்சிப்பொருளாகத் தான் இருக்கின்றன. விதிமுறை மீறுவோரைக் கண்டறிய முடியாத நிலை இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், விதிமுறைகளை தாராளமாக மீறுகின்றனர்.விபத்துகளைத் தவிர்ப்பதற்கு, மக்களிடம் மனமாற்றம் அவசியம். முதலில், வாகனங்களை உரிய முறையில் பயிற்சி எடுத்து இயக்காதவர்கள், வாகனங்களை இயக்கக்கூடாது. இதேபோல், களைப்பு நேரும்போதும், இரவு நேரங்களிலும், வாகனங்கள் இயக்குவதைத் தவிர்ப்பது அவசியம். அதிவேகத்தைக் குறைப்பதும் முக்கியம்!நாட்டில் உள்ள, அனைத்து வகை வாகனங்கள் 30 கோடி. இவற்றை உரிமம் இல்லாதவர்கள் பலர் இயக்கி வருகின்றனர். மாநகர மற்றும் நகர சாலைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், பல இடங்களில், இவை காட்சிப்பொருளாகத் தான் இருக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE