சென்னை:'வள்ளுவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து, அதை வைத்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை விட, இழிவான செயல் வேறொன்றும் இல்லை' என, உதயநிதி கூறியுள்ளார்.
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:எல்லாருக்கும் பொருந்தக் கூடியதால், திருக்குறளை உலகப் பொது மறையாகவும், வள்ளுவரை, அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவராகவும், தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது. ஆனால், அவருக்கு காவி உடை அணிவித்த கும்பல், இப்போது, சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகத்தில், குடுமி போட்டு ரசிப்பது, எல்லை மீறும் செயல்.
குழந்தைகள் மனதில் திட்டமிட்டே, நஞ்சை விதைக்கும், மத்திய அரசின் போக்கை, அ.தி.மு.க.,வும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.வள்ளுவரை, ஒரு வட்டத்துக்குள் அடைத்து, அதை வைத்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை விட, இழிவான செயல் வேறு இல்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE