சென்னை:'பெட்ரோலிய பொருட்கள் மீதான, அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும்' என, மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், நேற்று சென்னை ராயபுரத்தில் நடந்தது. கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். 'பெட்ரோலிய பொருட்கள் மீதான, அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள, முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என்பது உட்பட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், ஜவாஹிருல்லா பேசியதாவது:தமிழக சட்டசபையில், பா.ஜ.,வுக்கு, 'ஜீரோ' என்ற நிலையை மாற்ற வேண்டும் என, பா.ஜ., அரசு செயல்படுகிறது. அதை முறியடிக்கும் வகையில், நாம் பாடுபட வேண்டும்.
தி.மு.க., கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க உள்ளோம். கடந்த முறை போல் இல்லாமல், இம்முறை அதிக எம்.எல்.ஏ.,க்களோடு, சட்டசபைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE