பெங்களூரு -அண்டைய மாநிலங்களான மஹாராஷ்டிரா, கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்குள் வருவோருக்கு, கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இரண்டாம் அலை தொற்று பரவலை கட்டுப்படுத்த, விதிமுறைகளை கடுமையாக்கி, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அண்டைய மாநிலங்களான கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய பகுதிகளில், கொரோனா தொற்று, திடீரென அதிகரித்து வருகிறது. இதனால், கர்நாடகாவில், உஷார்படுத்தப்படுகிறது.குறிப்பாக, எல்லை பகுதிகளில் வாகனங்களை பரிசோதிக்கவும், வாகனங்ளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. விதிமுறைகள் கடுமைதொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருந்த நிலையில், திடீரென அதிகரித்துள்ளதால், விதிமுறைகளை கடுமையாக்க, கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, கேரளாவிலிருந்து கர்நாடகா வருவோர், தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு வாரங்களாக, கேரளாவிலிருந்து வந்து, கர்நாடகாவில் தங்கியுள்ளோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கல்லுாரிகள், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், ஓட்டல், லாட்ஜ்களில் தங்கியிருந்தாலும், பரிசோதனை செய்வது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், மஹாராஷ்டிராவிலிருந்து வருவோருக்கும், அதே கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநில சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருவதால், யாரும் அலட்சியம் செய்யக்கூடாது.அதிகாரிகளுக்கு தடுப்பூசிகொரோனா இரண்டாம் அலையை தடுக்கும் வகையில், அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொண்ட பின், தொற்றின் தாக்கம் குறையும்.
இறப்பு சதவீதமும் குறையும். பொது மக்கள், அலட்சியமாக இருக்காமல், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.திருமணம், நிகழ்ச்சிகள், மாநாடுகள் அதிகமாக நடக்கின்றன. அவற்றுக்கு கடிவாளம் போடப்படும். இரண்டாம் அலை, கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.பிரேசில் உட்பட வெவ்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள இரண்டாம் அலை, நம் நாட்டில் இன்னும் ஏற்படவில்லை. ஆனால், அண்டைய மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக, விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.
கேரளா, மஹாராஷ்டிராவிலிருந்து வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பர். ஊரடங்கு வருமா?விதிமுறைகளை கடைபிடித்தால், ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோல் கூறியதாவது:அண்டைய மாநிலங்களான மஹாராஷ்டிரா, கேரளா, கோவாவில், தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், கர்நாடகாவின் எல்லை மாவட்டங்களான பீதர், கலபுரகி, விஜயபுரா, பாகல்கோட்டை, பெலகாவி உட்பட பல மாவட்டங்களில், வாகனங்களை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் தினமும், அண்டைய மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு தொற்று பரவி, ஆபத்து நிகழ்வதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.முக்கிய ஆலோசனைஇதற்கிடையில், விதிமுறைகள் கடுமையாக்குவது குறித்து, அடுத்த வாரம் முதல்வர் எடியூரப்பா தலைமையில், மருத்துவ நிபுணர்கள் கமிட்டியுடன், முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.அப்போது, விதிமுறைகள் கடுமையாக்குவது குறித்த பல அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. அன்றைய தினம் அறிவிக்கப்படும் விதிமுறைகள், மார்ச் இறுதி வரை அமலில் இருக்கும் என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE