பொது செய்தி

தமிழ்நாடு

'சுமை' தரும் பயணம்... என்று சுகமாகுமோ!

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கான இடம் என்று, பஸ்களில் இருக்கை இருக்குமே ஒழிய, அதில், பெரும்பாலும், மாற்றுத்திறனாளிகளை அமர விடுவதில்லை. பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில், இது சாத்தியம் இல்லாததாகவும் இருக்கிறது.பல நேரங்களில், மாற்றுத்திறனாளிகள் கூட, நின்றுகொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. பஸ் நடத்துனர்கள் பெரும்பாலானோர் கூட, மாற்றுத்திறனாளி அமர்வதற்குரிய
 'சுமை' தரும் பயணம்... என்று சுகமாகுமோ!

மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கான இடம் என்று, பஸ்களில் இருக்கை இருக்குமே ஒழிய, அதில், பெரும்பாலும், மாற்றுத்திறனாளிகளை அமர விடுவதில்லை. பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில், இது சாத்தியம் இல்லாததாகவும் இருக்கிறது.பல நேரங்களில், மாற்றுத்திறனாளிகள் கூட, நின்றுகொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. பஸ் நடத்துனர்கள் பெரும்பாலானோர் கூட, மாற்றுத்திறனாளி அமர்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில்லை என்பதே பொதுவான நிலை. இதில், சக்கர நாற்காலி போன்றவற்றைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு எங்கே இடம் கிடைக்கப்போகிறது?நிறுத்தங்களை அடைவதற்கும், படிகளில் ஏறுவதற்கும், அறிவிப்புகளைப் படித்து புரிந்துகொள்வதற்கும், போதுமான சாதனமின்றி வடிவமைக்கப்பட்டுள்ள வாகன இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கும் இவர்களால் முடியவில்லை.'தேசத்தில், பொதுப்போக்குவரத்துக்கான பஸ்களில், ஏழு சதவீதம் மட்டுமே, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.வரும் ஜூன் 2022க்குள் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் வகையில், பொது போக்குவரத்து பஸ்களில் 25 சதவீதம் வசதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது சாத்தியமா என்பது தெரியவில்லை.பஸ், ரயில், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்களில், அவர்களுக்கு ஏற்ற வகையில் கழிவறை, சரிவுப்பாதை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், இன்னும் இது எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது.'இப்போதெல்லாம், அரசு பஸ்கள் கூட, சொகுசாக இருக்கின்றன' என்று, பயணிகள் பலர், கூறுவதைக் கேட்டு மகிழ்கிறோம். ஆனால், மாற்றுத்திறனாளிகள், இதைக் கேட்டு மகிழ முடியாத நிலையில்தான் உள்ளனர் என்பது, கசப்பான உண்மை!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X