அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூவத்துார் வெளியீடு ஆரம்பம்

Added : பிப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சசிகலா தரப்பினரை சேர்ப்பதில்லை என்பதில், அ.தி.மு.க., தலைமை உறுதியாக உள்ளதால், எரிச்சல் அடைந்துள்ள, தினகரன் தரப்பினர், கூவத்துார் வீடியோக்களை வெளியிட துவங்கி உள்ளனர்.பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு, அ.ம.மு.க.,வினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். ஆனால், அ.தி.மு.க.,வில், ஒரு அசைவும் இல்லை. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பணிகளை கவனிக்க, முதல்வர்

சசிகலா தரப்பினரை சேர்ப்பதில்லை என்பதில், அ.தி.மு.க., தலைமை உறுதியாக உள்ளதால், எரிச்சல் அடைந்துள்ள, தினகரன் தரப்பினர், கூவத்துார் வீடியோக்களை வெளியிட துவங்கி உள்ளனர்.
பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு, அ.ம.மு.க.,வினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். ஆனால், அ.தி.மு.க.,வில், ஒரு அசைவும் இல்லை. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பணிகளை கவனிக்க, முதல்வர் பழனிசாமி., தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சசிகலா, வீட்டிற்குள் முடங்கினார். அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பம், அ.ம.மு.க.,வினரிடம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அ.தி.மு.க., தலைமை மீது, அவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்த, பல்வேறு வீடியோக்களை, சமூக வலைதளங்களில் வெளியிட துவங்கி உள்ளனர்.

ஜெ., மறைந்த பின், சசிகலா முதல்வராவதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மாமல்லபுரம் அருகே, கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு செல்ல, அமைச்சர்கள் அனைவரும், சொகுசு பஸ்சில் ஏறும் காட்சியும், பஸ்சில் இருக்கைகள் நிரம்பியதால், முதல்வர் பழனிசாமி., நின்றபடி பயணிக்கும் காட்சியையும், தினகரன் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-பிப்-202118:12:48 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தினகரன்அன்பரே உமக்கும் சின்னம்மாவிற்கும் ஆட்சி செய்ய யோகம் உள்ளதா என்பதை ஜாதகத்தை முதலில் பார் பிறகு எல்லாம் காட்டலாம்.வெல்ல லாம்.நல்லவன் என்ற வாங்க நீண்டநாளாகலாம்.ஆனால் கெட்டவன் என்று பெயர்எடுக்க சிறிதுகாலமேதான்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-பிப்-202110:19:24 IST Report Abuse
Bhaskaran Aduththu raajan chellapapa nanraaga kudithuvittu nadanamaadiya katchiyai veliyidumbadi thaalmayudan kettukolkirom
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X