மாமல்லபுரம் : புதுப்பட்டினத்தில் பதிக்கப்பட்ட நிலத்தடி குழாயில், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு நீர் கசிவதால், கிழக்கு கடற்கரை சாலை சேதமடைகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், அணுசக்தி துறை கல்பாக்கம் பகுதிக்கு, பாலாற்று நீர், நிலத்தடி குழாய் வழியாக செல்லப்படுகிறது. இக்குழாய், புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையின் குறுக்கில், நிலத்தடியில் கடக்கிறது.சாலைப் பகுதி குழாய், அவ்வப்போது சேதமடைந்து, அதிலிருந்து கசியும் நீர், சாலையை சீரழிக்கும். புறவழிப்பாதை அமைக்கப்பட்டபோது, நான்குவழிப் பாதைக்கேற்ப, நிலத்தடி குழாய் தடம், மாற்றி அமைக்கப்பட்டது.மேலும், சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர், சாலையை பெயர்த்து, குழாயை சீரமைத்த பின், 'கான்கிரீட்' தளமாக அமைத்தனர்.
இந்நிலையில், புதுப்பட்டினம் புறவழிச்சாலை சந்திப்பில், குழாய் உடைந்து, மீண்டும் நீர் கசிகிறது. நீர் கசிவை தடுக்க, நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE