காஞ்சிபுரம் : சரிவிகித உணவை உட்கொள்ளுதல் குறித்து, ஆட்டோக்களில், 'ஸ்டிக்கர்' ஒட்டி, கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட, உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், சரிவிகித உணவை உட்கொள்ளுதல் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரத்தில் இயங்கும், 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட, முடிவானது. சரிவிகித உணவை உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை, கலெக்டர் மகேஸ்வரி, நேற்று முன்தினம், கலெக்டர் வளாக மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் ஒட்டி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம், சரிவிகித உணவு உட்கொள்ளும் இயக்க விழிப்புணர்வு விழாவில், நடமாடும் உணவு ஆய்வகத்தை, கலெக்டர் துவக்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE