கொண்டாட்டங்களும் இனிப்புகளும் கண்ணும் இமையும் போல, பிரிக்க முடியாதவை. திகட்ட திகட்ட நாம் உண்ணும் இனிப்புகள், எதாவது ஒரு வகையில் நம் உடல் நலத்தை சீர்கெடுப்பவையே. 'எதையும் லைட்டா எடுத்துக்கிட்டா வெயிட்டான செலிபரேஷன் உறுதி' என்கின்றனர், உணவியல் நிபுணர்கள்.ஸ்வீட்டும் சாப்பிடணும், திணறாம ஸ்டெடியாகவும் இருக்கணுமா... அப்படியே, 50 வருஷத்துக்கு பின்னாடிதான் போயாகணுங்கற கருத்துடன், திருப்பூர் ஆர்.டி.ஓ., ஆபீஸ் ரோடு அருகே புதிதாக உதயமாகியுள்ளது, 'ஆர்யாஸ் ஸ்வீட்ஸ் கேக் ஷாப்'. இங்கே தயாராகும் பெரும்பாலான பலகாரங்கள் பாரம்பரிய முறையில், கருப்பட்டியால் ஆனவை என்பது கூடுதல் சிறப்பு.''உடலுக்குக் கெடுதல் தராத ஒரு தின்பண்டத்தை குழந்தைகளுக்கு கொடுக்கணும்னு ஆசைப்படுறோம். அது நம்ம பாரம்பரிய நொறுக்குத் தீனியா இருந்தா மனசு சந்தோஷமா இருக்கும்ல!'' என்கிறார் கடை உரிமையாளர் ராஜாராம்.அவரிடம் பேசியபோது...திருப்பூரில் டீ, பேக்கரி ஸ்டால் அதிகம். வித்தியாசப்படுத்தி காட்டவே, டீ, காபியை காட்டிலும், உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் பாரம்பரிய ஸ்வீட்ஸ், காரம், சாட் அயிட்டங்கள், பிரஸ் ஜூஸ் ரகங்களை கொண்டு வந்துள்ளோம்.ஸ்வீட் - 300 வகைகள், காரம் - 250 வகைகள் உள்ளன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டி ரக ஸ்வீட்ஸ், சுகர் ப்ரீ ஸ்வீட்ஸ், மில்க் ஸ்வீட்ஸ் அதிகம். தவிர, முந்திரி ஸ்வீட்ஸ், நார்த் இந்தியன் ஸ்வீட், ஆர்கானிக் சவோரிஸ், முறுக்கு, சிப்ஸ், பீட்சா, பர்கர், சான்விட்ச் ரகங்களும் ஏராளம். திறப்பு விழா சலுகையாக 'சாட் ரகங்களுக்கு மட்டும்', 'ஆபர்' உண்டு. 'லைவ் கேக் ரூம்' உள்ளது. இங்கே நீங்கள் ஆர்டர் செய்யும் கேக்கை அதிகபட்சம், 10 நிமிடத்தில் உங்கள் கண் முன்னே தயாரித்து தருகிறோம்.லைவ் கிச்சன் உள்ளது. தயாரிக்கும் முறையில் எந்த ஒளிவுமறைவும் கிடையாது. உணவுக்கான தரத்தை நீங்களே சோதிக்கலாம். ஒரு விசிட் அடிச்சுப்பாருங்களே...! ' என்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE