சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மன் பல்லக்கில் முறிவு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன், சூரிய பிரபை வாகன வீதியுலாவின்போது, பல்லக்கு தடி திடீரென உடைந்ததால், பல்லக்கு துாக்கிச்சென்ற இருவர் காயமடைந்தனர். இதை பார்த்து, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், இம்மாதம், 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.இதன், மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை, தங்க சூரிய பிரபை வாகனத்தில், அம்மன்

காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன், சூரிய பிரபை வாகன வீதியுலாவின்போது, பல்லக்கு தடி திடீரென உடைந்ததால், பல்லக்கு துாக்கிச்சென்ற இருவர் காயமடைந்தனர். இதை பார்த்து, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், இம்மாதம், 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.இதன், மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை, தங்க சூரிய பிரபை வாகனத்தில், அம்மன் எழுந்தருளினார்.வாகன மண்டபத்தில் இருந்து அம்மன் புறப்பட்டு, சன்னிதி தெருவில் செல்லும்போது, பல்லக்கின் ஒரு பக்க தடி, திடீரென உடைந்தது.வாகனம் ஒரு பக்கமாக சாய்ந்ததால், பழு தாங்க முடியாமல், பல்லக்கை துாக்கிச்சென்ற முருகன், 40, என்பவர் விழுந்தார்.

இதையடுத்து அவர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தங்கராசு, 32, என்பவருக்கும், தலையில் லேசான காயம் ஏற்பட்டது. வீதியுலாவின்போது, பல்லக்கின் தடி உடைந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து, சுவாமியை துாக்குவோர் கூறியதாவது: கடந்த ஆண்டும், சூரிய பிரபை உற்சவத்தின்போது, பல்லக்கின் ஒரு தடியில் முறிவு ஏற்பட்டது. \இதனால், வேறொரு கோவிலில் இருந்து, தடி வாங்கி வந்து, இந்தாண்டு உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், அதே சூரிய பிரபை உற்சவத்தின்போது, பழைய தடி உடைந்து விட்டது. இதையடுத்து, கேடய வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, ராஜ வீதியை சுற்றி வந்தார்.உற்சவ விழாவுக்கு முன், பல்லக்கு முறையாக இருக்கிறதா என, கோவில் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X