திருப்பூர்:விலை உயர்வு, தட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்க, மலேசியாவிலிருந்து 50 டன் ரப்பர் இறக்குமதி செய்கிறது, திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம்.திருப்பூரில், பின்னலாடை துறை சார்ந்து, 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. ரப்பர், லைக்ரா, பாலியெஸ்டர், நைலான் நுாலிழைகள், இந் நிறுவனங்களின் பிரதான மூலப்பொருள்.சில மாதங்களாக, ரப்பர், நுால் என, அனைத்து மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்து விட்டது. மேலும், உள்நாட்டில், இவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் பகுதி எலாஸ்டிக் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த 2020, டிச., மாதம், எலாஸ்டிக் உற் பத்தியாளர் சங்கம், எலாஸ்டிக் விலையை, 20 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. ஆனால், ஆடை உற்பத்தி நிறுவனங்களோ, 10 சத வீதமே விலை உயர்வு அளிக்கின்றன. மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வை நோக்கி செல்வதால், எலாஸ்டிக் துறையினர் தவிக்கின்றனர்.எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:எலாஸ்டிக் உற்பத்தி மூலப்பொருளான ரப்பர் மற்றும் நைலான், பாலியெஸ்டர் நுாலிழை விலைகள், 30 சதவீதம் உயர்ந்துள்ளன; கிலோ 400 ரூபாயாக இருந்த லைக்ரா இழையின் விலை, மூன்று மாதங்களில், 600 ரூபாயை எட்டியுள்ளது.கொரோனாவுக்கு பின், உலக அளவில் 'கிளவுஸ்' தேவை அதிகரித்துள்ளது. இதற்காக ரப்பர் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. திருப்பூர் எலாஸ்டிக் நிறுவனங்களுக்கு, கேரளா உட்பட உள்நாட்டு பகுதிகளிலிருந்து, போதுமான அளவு ரப்பர் கிடைப்பதில்லை.மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதால், எலாஸ்டிக் உற்பத்தி செலவினம் 30 சதவீதத்துக்கு அதிகரித்துள்ளது. எலாஸ்டிக் விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டது; ஆனால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 10 சதவீதமே உயர்வு அளிக்கின்றன.எலாஸ்டிக்கிற்கான தொகையை வழங்கவும், மாதக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர். முன்பணம் செலுத்தி, ரப்பர், நுால் ஆகியவற்றை எலாஸ்டிக் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. இச்சூழலில், தொகை வழங்க தாமதிப்பது, நிதிச்சுமையை மேலும் அதிகரிக்க செய்கிறது.எனவே, ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 20 சதவீத விலை உயர்வை முழுமையாக வழங்க வேண்டும்; 30 முதல் 60 நாட்களுக்குள், தொகையை வழங்க வேண்டும்.ரப்பர் இறக்குமதிஅவர் மேலும் கூறிய தாவது:இந்தியாவில் ரப்பர் விலை உயர்வு, தட்டுப்பாடு நீடிக்கிறது. நிலைமையை சமாளிக்க, எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், மலேசியாவிலிருந்து ரப்பர் இறக்குமதி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 50 டன் ரப்பர் இறக்குமதிக்கு புக்கிங் செய்துள்ளோம்.இது, ஏப்., மாதம் இந்தியா வந்துசேரும். மற்ற நாடுகளிலிலும் ரப்பர் விலை உயர்ந்தே காணப்படுகிறது. ஆனாலும், இறக்குமதி மூலம், செலவை கட்டுப்படுத்த முடியாதபோதும், எலாஸ்டிக் நிறுவனங்களுக்கு, தட்டுப்பாடு இன்றி ரப்பர் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்; உற்பத்திசீராக நடைபெறும் இவ் வாறு அவர் கூறினார்.ரப்பர் இறக்குமதிஅவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில் ரப்பர் விலை உயர்வு, தட்டுப்பாடு நீடிக்கிறது. நிலைமையை சமாளிக்க, எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், மலேசியாவிலிருந்து ரப்பர் இறக்குமதி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 50 டன் ரப்பர் இறக்குமதிக்கு புக்கிங் செய்துள்ளோம்.இது, ஏப்., மாதம் இந்தியா வந்துசேரும். மற்ற நாடுகளிலிலும் ரப்பர் விலை உயர்ந்தே காணப்படுகிறது. ஆனாலும், இறக்குமதி மூலம், செலவை கட்டுப்படுத்த முடியாதபோதும், எலாஸ்டிக் நிறுவனங்களுக்கு, தட்டுப்பாடு இன்றி ரப்பர் கிடைப்பதை உறுதி செய்யமுடியும்; உற்பத்தி சீராக நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE