பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : பிப் 21, 2021
Share
Advertisement
தலைமறைவு ரவுடி கைது கூடுவாஞ்சேரி: நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 31. பிரபல ரவுடி. பா.ஜ.,வைச் சேர்ந்த இவர் மீது, கொலை உட்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், வழக்குகளில் ஆஜராகமால், ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார்.இந்நிலையில், கூடுவாஞ்சேரி ரயில்வே பாலம் அருகில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரவுடி கார்த்திக்கை

தலைமறைவு ரவுடி கைது கூடுவாஞ்சேரி: நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 31. பிரபல ரவுடி. பா.ஜ.,வைச் சேர்ந்த இவர் மீது, கொலை உட்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், வழக்குகளில் ஆஜராகமால், ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார்.இந்நிலையில், கூடுவாஞ்சேரி ரயில்வே பாலம் அருகில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரவுடி கார்த்திக்கை பார்த்தனர்; தப்பியோட முயன்ற அவரை பிடித்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில், கார்த்திக் அடைக்கப்பட்டார்.பா.ஜ., பிரமுகரிடம் 'செயின் ' பறிப்புவண்டலுார்: வண்டலுார், சிங்காரத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் மனைவி லட்சுமி, 51. பா.ஜ., மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர்.இவர், நேற்று முன்தினம், வண்டலுார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, வீட்டிற்கு நடந்து சென்றார். சிங்காரத்தோட்டம் ரயில்வே பாதை அருகே, அவரை வழிமறித்த மூன்று பேர், லட்சுமி கழுத்திலிருந்த ஏழு சவரன் தாலிக்கொடியை பறித்துச்சென்றனர்.

8 சவரன் நகை திருட்டுஉத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, ஆர்.என்.கண்டிகையைச் சேர்ந்தவர் பாத்திமா ராணி, 50. கடந்த, 14ம் தேதி, தன் வீட்டை பூட்டி, செய்யாறில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.பீரோவில் இருந்த தங்கச்செயின், மோதிரம், கம்மல் என, எட்டு சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து, பெருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், பழையனுாரைச் சேர்ந்த ஜெகதீசன், 26, திருவாலங்காடு, பராசக்தி நகரைச் சேர்ந்த கலைவாணி, 22, என்பவருடன், தொடர்பு வைத்திருந்தார். கலைவாணி, திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததால், மனமுடைந்த ஜெகதீசன், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதையடுத்து, ஜெகதீசனின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, திருவாலங்காடு போலீசார், ஜெகதீசனை தற்கொலைக்குத துாண்டியதாக, கலைவாணி, அவரது தாய் வளர்மதி, 47, உறவினர் பாண்டியன், 33, ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

விபத்தில் ஒருவர் மரணம்கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, புதுவாயல் கிராமத்தில் வசித்தவர் அருண், 54; தொழிற்சாலை ஒப்பந்ததாரர். நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப் பூண்டியில் இருந்து, கவரைப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் மூதாட்டி பலிகனகம்மாசத்திரம்: திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், தாமஸ் மனைவி லலிதா, 70. இவர், நேற்று, அதே கிராமத்தில் நுாறு நாள் வேலைக்கு சென்றார். மதிய உணவின் போது, கும்மாத்தம்மன் கோவில் அருகில், லலிதா உட்கார்ந்திருந்த போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் ஒன்று, திடீரென பின்னோக்கி வந்து மோதியது.இதில், லலிதா, பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள், லலிதாவை மீட்டு, திருவள்ளூர், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, லலிதா இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X