பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
செயல் அலுவலர்கள் கூட்டம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள, ஹிந்து அறநிலையத் துறை, கோவில் நிர்வாக அலுவலர்கள் சங்கத்தில், மாநில செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் அருட்செல்வன் தலைமையில், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாக குறைபாடுகள் குறித்து, பொறுப்பாளர்கள் பேசினர். குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்கள் பலர்

செயல் அலுவலர்கள் கூட்டம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள, ஹிந்து அறநிலையத் துறை, கோவில் நிர்வாக அலுவலர்கள் சங்கத்தில், மாநில செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் அருட்செல்வன் தலைமையில், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாக குறைபாடுகள் குறித்து, பொறுப்பாளர்கள் பேசினர்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்கள் பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பற்றி பேசினர். இந்த கோரிக்கைகளை, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும், சங்கத்தினர் பேசினர்.செங்கையில் ஆர்ப்பாட்டம்செங்கல்பட்டு: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட, காங்., சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மாவட்டத்தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில், செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 200க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

அதேபோல், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில், ஆட்டோ ஓட்டுனர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர். தெப்போற்சவம் நிறைவுஉத்திரமேரூர்: உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், மாசி மகத்தையொட்டி, மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டுக்கான தெப்போற்சவம், 19ம் தேதி துவங்கியது.அன்று மாலை, 6:00 மணிக்கு கோவில் குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தர வரதராஜ பெருமாள் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வந்தார்.

தொடர்ந்து, மூன்று நாட்கள் நடந்த தெப்போற்சவம், நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.200 பேருக்கு தடுப்பூசி திருத்தணி: திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த, கொரோனா தடுப்பூசி போடும் முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் லோகநாயகி பங்கேற்று, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, துவக்கி வைத்தார். அதன்பின், 60 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த முகாமில், 75 வருவாய் துறை ஊழியர்களும், திருத்தணி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், 65 ஊழியர்கள் என, மொத்தம், 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ரூ.40 லட்சத்தில் கால்நடை மருந்தகம்திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு ஊராட்சியில், பொதுப்பணித் துறையின் மூலம், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கால்நடை மருந்தகம் கட்டும் பணிகள் நேற்றுத் துவங்கின. இதில், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன் பங்கேற்று, கட்டடத்திற்கு அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார். இப்பணிகள், மூன்று மாதத்திற்குள் முடித்து, கால்நடை துறையிடம் ஒப்படைக்கப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில், கால்நடை மருத்துவர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X