பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் அறங்காவலர் குழுவில் பூசாரிகள் இடம்பெற வலியுறுத்தல்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர், பிப். 21-தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நல சங்க நிர்வாகிகள், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் வழங்கியுள்ள மனு:ஆண்டிப்பண்டாரம், ஜங்கம், யோகீஸ்வரர், உவச்சர், ஓதுவார், தேசிகர், புலவர், குருக்கள் உட்பட பல்வேறு பிரிவுகளுடன், 40 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ளனர். இந்து அறநிலையத்துறை கோவில்களில், அறங்காவலர் குழு

திருப்பூர், பிப். 21-

தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நல சங்க நிர்வாகிகள், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் வழங்கியுள்ள மனு:ஆண்டிப்பண்டாரம், ஜங்கம், யோகீஸ்வரர், உவச்சர், ஓதுவார், தேசிகர், புலவர், குருக்கள் உட்பட பல்வேறு பிரிவுகளுடன், 40 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ளனர். இந்து அறநிலையத்துறை கோவில்களில், அறங்காவலர் குழு நியமிக்கும் போது, கோவில் பூசாரிகளையும் உறுப்பினராக நியமிக்க வேண்டும்.கோவில் பூஜை பணிக்காக முன்னோர் வழங்கிய நிலத்துக்கு பட்டா வழங்கியுள்ளனர்; இருப்பினும், முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. சம்பளம் வழங்கப்படாததால், நிலத்தில் விவசாயம் செய்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.உண்டியல் என்ற வடமொழி சொல்லை அகற்றிவிட்டு, 'பண்டாரம்' என்ற தமிழ்பெயரை பயன்படுத்த வேண்டும். சினிமா, நாடகங்களில் பண்டாரம் என்ற வார்த்தையை இழிவுபடுத்துவதை தடுக்க வேண்டும்.பூசாரிகள் வாழ்க்கை மேம்பட, மானியத்துடன் தொழிற்கடன் வழங்க வேண்டும். தகுதியான பூசாரிகளை, நலவாரிய உறுப்பினராக நியமிக்க வேண்டும். நலவாரிய உறுப்பினருக்கு, 60 வயது கடந்த பிறகு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய நலவாரிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.கல்வி, வேலை வாய்ப்புகளில், 20 சதவீத ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக, 5 சதவீதம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X