பொது செய்தி

இந்தியா

தேர்தலை முன்னிட்டு மாநிலங்களில் குவிக்கப்படும் மத்திய ஆயுத காவல் படையினர்

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
.புதுடில்லி: சட்டசபை தேர்தல்களை சந்திக்க இருக்கும், நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு, தேர்தல் பணிக்காக, மத்திய ஆயுத காவல் படையினர், 25 ஆயிரம் பேர் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் - மே மாதங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில், தேர்தல் கமிஷன் தீவிரமாக

.புதுடில்லி: சட்டசபை தேர்தல்களை சந்திக்க இருக்கும், நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு, தேர்தல் பணிக்காக, மத்திய ஆயுத காவல் படையினர், 25 ஆயிரம் பேர் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.



latest tamil news


தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் - மே மாதங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல்களை சந்திக்க இருக்கும் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு, சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுத காவல் படையினர், 25 ஆயிரம் பேர் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.அதிகபட்சமாக, மேற்கு வங்கத்திற்கு, 12 ஆயிரத்து, 500 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.


latest tamil news


தமிழகத்திற்கு, 4,500 வீரர்கள்; அசாமுக்கு, 4,000 வீரர்கள்; கேரளாவுக்கு, 3,000 வீரர்கள்; புதுச்சேரிக்கு, 1,000 வீரர்களும் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.இவர்களைத்தவிர, 7,500 வீரர்கள், தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட உள்ளனர். தேவை ஏற்படும்போது, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு, அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர்.தேர்தல் கமிஷனர்கள் நடத்திய முதற்கட்ட மதிப்பீடு அடிப்படையில், இந்த எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், இந்த எண்ணிக்கை உயர்த்தப்படலாம்.இவ்வாறு, அவர் கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-பிப்-202113:10:49 IST Report Abuse
Ramesh Sargam ஒரு பக்கம் மத்திய ஆயுத காவல் படையினர் குவிக்கப்படுகின்றனர். மறுபக்கம் 'சப்தமில்லாமல்' பணம் குவிக்கப்படுகிறது - மக்கள் இடையே பட்டுவாடா செய்ய. அப்படி பணம் குவிக்கும் கட்சிகளை, அதன் தொண்டர்களை முதலில் பிடித்து சிறையில் 'குவிக்கவேண்டும்' - நேர்மையான தேர்தல் நடைபெறவேண்டுமென்றால்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-பிப்-202111:07:34 IST Report Abuse
Lion Drsekar இதே செய்தியை எதிர்க்கதிகளின் செய்தி ஊடகங்களில் ஜனநாயகத்துக்கு எதிராக சதி நடக்கிறது, எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இராணுவத்தை வைத்து தேர்தல் நடத்துகின்றனர், இது ஜனநாயகத்தின் படுகொலை, இதற்க்கு மொழியை உதாரணமாகக் கூறி இந்த மொழியை மற்றும் இன்னன்ன மதத்தினரை கூண்டோடு ஒழிப்பதற்கு மிகப்பெரிய சதிவேலை நடக்கிறது என்று கூறுவார்கள்,வந்தே மாதரம்
Rate this:
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
21-பிப்-202120:10:35 IST Report Abuse
தமிழன்எங்கள் தமிழ் நாட்டில் காவலர்களுக்கு கூட தேவை இருக்காது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X