பல்லடம்:பல்லடத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், அரியலுார் சிமென்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பல்லடம் நகராட்சி பகுதியில், தினமும், 15 டன் குப்பை சேகரமாகின்றன. அவை, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மக்காத குப்பைகள் தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றன. அவ்வாறு, கடந்த சில மாதங்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அரியலுார் சிமென்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:நகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பைகள் கிடங்குகள் மூலம் உரமாக்கப்படுகின்றன. இதேபோல், மக்காத குப்பைகள் நவீன இயந்திரம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பண்டல்களாக அவ்வப்போது கட்டி வைக்கப்பட்டு, அரியலுார் சிமென்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பப்படும்.அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தால், அவற்றை சிமென்ட் நிறுவனமே நேரடியாக வந்து எடுத்து செல்லும். கடந்த சில மாதங்களில் சேகரமான, 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலுார் அனுப்ப தயார் நிலையில் இருந்தன. நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டு, லாரி மூலம் அவை அரியலுார் அனுப்பப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE