பொது செய்தி

தமிழ்நாடு

திடீர் மழையால் குளிர்ந்த திருப்பூர்; மக்கள் மகிழ்ச்சி

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் நேற்று காலை திடீரெனப் பெய்த மழையால், ரோடுகளில் மழை நீர் வழிந்தோடியது.வளிமண்டலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அவ்வகையில், நேற்று காலை 10:30 மணியளவில் திருப்பூர் நகரின் பல பகுதிகளில் திடீரென பலத்த மழை
 திடீர் மழையால் குளிர்ந்த திருப்பூர்; மக்கள் மகிழ்ச்சி

திருப்பூர்:திருப்பூரில் நேற்று காலை திடீரெனப் பெய்த மழையால், ரோடுகளில் மழை நீர் வழிந்தோடியது.வளிமண்டலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அவ்வகையில், நேற்று காலை 10:30 மணியளவில் திருப்பூர் நகரின் பல பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. சில இடங்களில் 15 நிமிடங்கள் வரையும், சில பகுதிகளில் அரை மணி நேரமும் இந்த மழை பெய்தது.இந்த மழையால் நகரின் அனைத்து ரோடுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஜம்மனை ஓடை, சங்கிலிப் பள்ளம் மற்றும் சபரி ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து வந்து நொய்யலில் கலந்தது.பல்வேறு ரோடுகளில் மழை நீர் வழிந்தும் ரோட்டில் உள்ள குழிகளில் தேங்கியும் நின்றது. இதனால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படி சென்றன.ரோட்டில் பெருக்கெடுத்த மழை நீர், அருகேயுள்ள மழை நீர் மற்றும் கழிவுநீர் வாய்க்காலில் சென்று சேர்ந்தது.சில கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை துாய்மை பணியாளர்கள் சரி செய்து, மழை நீர் செல்ல வழி ஏற்படுத்தினர். ஒரு சில பகுதிகளில் தாழ்வான பகுதியில் இருந்த குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து அவதி ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X