தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

'ரூட்' மாறும் அ.தி.மு.க., சீனியர்கள் மாவட்ட அமைச்சர்கள் விசும்பல்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
தி.மு.க.,வின் ஆ.ராசா, அமைச்சர் பதவியை குறிவைத்து, எம்.பி., பதவியை உதற விரும்புவதை போல, அ.தி.மு.க.,விலும் இரண்டு சீனியர்கள், டில்லியை விட சென்னையே மேல் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். எம்.எல்.ஏ.,வை விட, எம்.பி.,பதவி பெரியது என்றாலும், டில்லியில் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம், எதிர்க்கட்சியை விட, ஆளும் கட்சியினருக்கு அதிகம் இருக்கும்.சீனியராக இருந்தால்,

தி.மு.க.,வின் ஆ.ராசா, அமைச்சர் பதவியை குறிவைத்து, எம்.பி., பதவியை உதற விரும்புவதை போல, அ.தி.மு.க.,விலும் இரண்டு சீனியர்கள், டில்லியை விட சென்னையே மேல் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

எம்.எல்.ஏ.,வை விட, எம்.பி.,பதவி பெரியது என்றாலும், டில்லியில் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம், எதிர்க்கட்சியை விட, ஆளும் கட்சியினருக்கு அதிகம் இருக்கும்.சீனியராக இருந்தால், கேட்கவே வேண்டாம். 'நம்மை விட ஜூனியர்கள் எல்லாம், இங்கு அமைச்சர்களாக வலம் வருகின்றனர்; சின்ன சிபாரிசுக்கு கூட, அவர்களிடம் போய் நிற்க வேண்டிய நிலை தேவையா' என, யோசிக்கின்றனர்.

இதனால், அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,க்களான,கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், சட்டசபை தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளனர் கிருஷ்ணகிரியில் முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியும், 'சீட்' வாங்க விரும்புகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், இருவரும் அமைச்சர்கள் என்பதால், அவர்களின் மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், தர்மசங்கடத்தில் தவிக்கின்றனர்.

இருவரும் சூப்பர் சீனியர்கள் என்பதால், 'சீட்' மறுக்க முடியாது. அப்படி நடந்தால், வாய்ப்பு இழக்கும் அமைச்சர்கள், தேர்தலில் முழு மனதோடு துணை நிற்பது கேள்விக்குறிதான். நேரடி, தி.மு.க., எதிர்ப்புடன், இவர்களின் மறைமுக எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அது, தி.மு.க.,வுக்கு அல்லவா சாதகமாக போகும் என்பது, முதல்வர் பழனிசாமியின் கவலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X