மேல்நிலை குடிநீர் தொட்டி: இடிந்து விழும் அபாயம்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பல்லடம்:கரடிவாவி அருகில், மேல்நிலை தொட்டி உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சிக்கு உட்பட்ட, கரடிவாவி புதுார் - - ஆறாக்குளம் செல்லும் வழியில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி உள்ளது. இப்பகுதி குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை இதன் மூலம் செய்யப்பட்டு வருகிறது.பத்து ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட

பல்லடம்:கரடிவாவி அருகில், மேல்நிலை தொட்டி உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சிக்கு உட்பட்ட, கரடிவாவி புதுார் - - ஆறாக்குளம் செல்லும் வழியில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி உள்ளது. இப்பகுதி குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை இதன் மூலம் செய்யப்பட்டு வருகிறது.பத்து ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இத்தொட்டி பராமரிப்புகள் இன்றி பலத்த சேதம் அடைந்துள்ளது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து தொட்டி விரிசல் அடைந்துள்ளது. அருகே, குடியிருப்புகள், தறி குடோன்கள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன.பலத்த சேதமடைந்துள்ள இத்தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. பழைய தொட்டியை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X