பல்லடம்:பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற முயற்சி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.பல்லடத்தில் வார சந்தை, தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, மற்றும் கடை வீதி உள்ளிட்ட அனைத்தும் என்.ஜி.ஆர்., ரோட்டில் உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் சவாலாக இருந்து வரும் இந்த ரோட்டில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அவை அனைத்தும் காற்றில் பறந்தன.ஊரடங்கு காலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக, என்.ஜி.ஆர்., ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. என்.எச்., ரோட்டின் ஒரு பகுதியில், இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. தற்போது மீண்டும் தடுப்புகளை அகற்றி, இருவழிப் பாதையாக மாற்ற முயற்சி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறுகையில், ''ஆக்கிரமிப்புகள் காரணமாக என்.ஜி.ஆர்., ரோடு ஏற்கனவே அவதிப்பட்டு வருகிறது. ஒரு வழிப்பாதையாக மாற்றியபின் வாகன நெரிசல் ஓரளவு கட்டுக்குள் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மீண்டும் இரு வழிப்பாதை ஆக்குவதால், நெரிசல் அதிகரிக்கும்.ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன் தடுப்புகளை அகற்ற சிலர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. வாகன ஓட்டிகள் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு போலீசார், மற்றும் நகராட்சி நிர்வாகம் இதை அனுமதிக்க கூடாது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE