பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் சாயக்கழிவு டிராக்டர் சிறைப்பிடிப்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பல்லடம், பிப். 21-பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில், தனியார் இடத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் நேற்று சாயக்கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டன.கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலையில் இருந்து கழிவுகள் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்டது தெரிந்தது.அப்பகுதி பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்து ஊராட்சி நிர்வாகத்திடம்

பல்லடம், பிப். 21-

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில், தனியார் இடத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் நேற்று சாயக்கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டன.கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலையில் இருந்து கழிவுகள் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்டது தெரிந்தது.அப்பகுதி பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். விசாரித்த ஊராட்சி அதிகாரிகள் கழிவுகள் கொட்டியதற்காக, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், டிராக்டரை ஓட்டி வந்த டிரைவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.சாயக்கழிவுகளை, குளம், குட்டைகள், நீர் வழித்தடங்கள் மற்றும் பொது இடங்களை தொடர்ந்து, தற்போது பயன்பாடற்ற கிணறுகளிலும் கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X