இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்காரில் போதைப் பொருள் வைத்திருந்த பா.ஜ., இளைஞர் அணி செயலர் கைதுகோல்கட்டா: மேற்கு வங்கத்தில், காரில் போதைப் பொருள் வைத்திருந்த, பா.ஜ., இளைஞர் அணி பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமியை, போலீசார் கைது செய்துள்ளனர். இதில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் சதி செய்திருப்பதாக, பமீலா குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சோதனைமேற்கு வங்க மாநிலத்தில்,
today crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்


காரில் போதைப் பொருள் வைத்திருந்த பா.ஜ., இளைஞர் அணி செயலர் கைது

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், காரில் போதைப் பொருள் வைத்திருந்த, பா.ஜ., இளைஞர் அணி பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமியை, போலீசார் கைது செய்துள்ளனர். இதில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் சதி செய்திருப்பதாக, பமீலா குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சோதனைமேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில், நேற்று முன்தினம் மாலை, பா.ஜ., இளைஞர் அணியின் பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமி, காரில் சென்றார். அவருடன், இளைஞர் அணி உறுப்பினர் பிரபிர் குமார் தே என்பவரும் இருந்தார்.அப்போது, அவரின் காரை மறித்து, போலீசார் சோதனை செய்தனர். சோதனையில், காரின் இருக்கைக்கு அடியில் இருந்தும், பமீலாவின் பணப் பையில் இருந்தும், 'கோகெய்ன்' என்ற போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது.

பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட இருவர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், லஷ்கர் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த அபித் வாசா மற்றும் பஷீர் அகமது கோஜர் இருவரும், பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்த இவர்கள், பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலுக்கும் திட்டமிட்டு இருந்ததாக, போலீசார் கூறினர்.


தமிழக நிகழ்வுகள்

மது குடிப்பதற்காக திருடியவர் கைது

காஞ்சிபுரம் : மது குடிப்பதற்காக, திருட்டில் ஈடுபட்ட நபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், 40; மூட்டை துாக்கும் தொழிலாளி. குடி பழக்கத்திற்கு அடிமையான அவர், வருமானம் இல்லாததால், திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.இரு தினங்களுக்கு முன், சின்ன காஞ்சிபுரத்தில், பூட்டிய டீ கடையை திறந்து, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடியுள்ளார்.அப்போது, பணியில் ஈடுபட்ட போலீசார், இதை பார்த்துள்ளனர். போலீசார் இருப்பதை அறிந்த சசிகுமார், சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், போலீசார் அவரை துரத்தி பிடித்தனர்.போலீசார் விசாரணையில், தினமும் குடிப்பதற்காக, சின்ன சின்ன திருட்டில், சசிகுமார் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் இருவர் கைது

கள்ளக்குறிச்சி : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர் .

கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ரங்கநாதன்,33; இவர் கடந்த 17ம் தேதி, வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.மேலும், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என அதே கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் பாண்டுரங்கன், 48; சிறுமியை மிரட்டியுள்ளார்.மறுநாள் காலை சிறுமியை அவரது தாய் குளிப்பாட்டிய போது, உடலில் ஏற்பட்டிருந்த மாற்றம் குறித்து கேட்டுள்ளார்.


latest tamil news


தண்ணீரில் விஷம் கலப்பு: 6 ஆயிரம் கோழிகள் பலி

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பூதப்பாண்டி துவரங்காட்டை சேர்ந்தவர் சுரேஷ். திட்டுவிளையை சேர்ந்தவர் ராஜேஷ். இருவரும் இணைந்து செண்பகராமன்புதுார் தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளனர். சம்பவத்தன்று ஆறாயிரம் கோழிகள் இறந்து கிடந்தன. ஆரல்வாய்மொழி போலீஸ் விசாரணையில் கோழிகள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்தது தெரியவந்தது. முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகர் அடுத்த ராம்நகரை சேர்ந்த எலெக்ட்ரீசியன் பாண்டிசெல்வம் மகன் ஜெயபாண்டி 10. அதேபகுதி விவசாயி ஜான்சன் அந்தோணி மகன் ஜிவின்பால் 7. இருவரும் நேற்று மதியம் 2:00 மணிக்கு குன்னுார் ரோட்டையொட்டிய குட்டைக்கு குளிக்க சென்றனர். தண்ணீரில் மூழ்கியவர்களை மெக்கானிக் ஒருவர் மீட்டார். ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இருவரும் பலியானதாக தெரிவித்தனர். கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணை தாக்கிய தொழிலாளிக்கு 21 மாதம் ஜெயில்

பரங்கிப்பேட்டை : பெண்ணை இரும்பு பைப்பால் தாக்கிய, கட்டட தொழிலாளிக்கு, 21 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

புதுச்சத்திரம் அடுத்த ராமநாதகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தணிகாச்சலம் மனைவி வசந்தி, 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 35; கட்டட தொழிலாளி. இவருக்கும், இடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மீண்டும் அவர்களுக்குள், தகராறு ஏற்பட்டது. அதில், கோபி ஆத்திரமடைந்து, வசந்தியை இரும்பு பைப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.வசந்தி கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் கோபியை கைது செய்து, பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமது சாதிக் உசேன் நேற்று, கோபிக்கு 21 மாதம் சிறை தண்டனை மற்றும் 2,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


போலீஸ் துப்பாக்கிச் சூடுமியான்மரில் 2 பேர் பலி

மாண்ட்லே: தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் அரசை கவிழ்த்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'போராட்டத்தில் ஈடுபட்டால், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. யாங்கூன், மாண்ட்லே, தலைநகர் நேய்பிடா உட்பட பல நகரங்களில், நேற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்ட்லேவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு பேர் இறந்தனர்.

பயங்கரவாதிகள் தாக்குதல்பாக்., வீரர்கள் சாவு

கராச்சி: பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா பகுதியில், எல்லை பாதுகாப்பு படையினர், வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வெடித்து சிதறியது. இதில் எல்லை பாதுகாப்பு படையினர் வாகனம் சிக்கியதில், வீரர் ஒருவர் இறந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள், மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து, வெடிக்கச் செய்தது, விசாரணையில் தெரிய வந்தது.இதேபோல், கோஹ்லு மாவட்டம், கோஹன் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினர் சோதனைச் சாவடி மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், நான்கு வீரர்கள் இறந்தனர்.

பாட்டி, பேத்தி கொலை பண தகராறில் கொடூரம்

தென்காசி:-பணத்தகராறில் பாட்டி மற்றும் பேத்தியை கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரியவந்துள்ளது.

தென்காசி, கீழப்புலியூரைச் சேர்ந்தவர் கோமதியம்மாள், 55. இவரது மகள் சீதாலட்சுமி, 25. பேரன் மணீஷ், 6; பேத்தி உத்ரா, 1 ஆகியோருடன் வசித்து வந்தார். கோமதி, உத்ரா ஜன., 12 முதல் காணாமல் போயினர். குற்றாலம் போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று தென்காசி, மத்தளம்பாறை அருகே காட்டுப் பகுதியில்,சாக்கு மூட்டையில் இரு உடல்கள் இருப்பது குறித்து தகவல் வந்தது.

பாவூர்சத்திரம் போலீசார் விசாரணையில், காணாமல் போன கோமதியும், பேத்தியும் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.அவர் கடைசியாக பேசிய அலைபேசி எண்ணை கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் வீரபாண்டியம்மாள் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்


latest tamil newsபோலி ஆதார்: வாலிபரிடம் விசாரணை

பல்லடம்:அசாம் மாநிலம், தரங் பகுதியைச் சேர்ந்தவர் மொகர் அலி, 23; திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, அருள்புரத்தில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது ஆதார் அட்டையை பெற்ற, வீட்டு உரிமையாளர் சரிபார்த்தபோது, போலி என்று தெரியவந்தது.

பல்லடம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு, அவர் தகவல் அளித்தார்.மொகர் அலி, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் தானா அல்லது வங்கதேசத்தில் இருந்து வந்தவரா, போலி ஆதார் அட்டையை தயாரித்து வழங்கியது யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்

வெடிகுண்டு தாக்குதல்ஆப்கனில் 5 பேர் மரணம்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேற்று வெவ்வேறு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில், ஐந்து பேர் இறந்தனர்; இரண்டு பேர் காயம் அடைந்தனர்.காபூலின் தாருலமன், கார்ட் - இ - பர்வான், புல் - இ - வாக்தாத் ஆகிய பகுதிகளில், நேற்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.பயங்கரவாதிகள், போலீஸ் மற்றும் ராணுவ வாகனங்களை குறி வைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம், குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், ஒரு பெண் உட்பட, ஐந்து பேர் இறந்தனர்; இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு, இதுவரையிலும், எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின்மேல்முறையீடு தள்ளுபடி

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினையும், அவரது அரசின் செயல்பாடுகளையும், எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து, புடின் அரசு, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது நவால்னி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் ஜெர்மனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிசோதனையில், அவர் குடித்த டீயில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.சிகிச்சைக்குப் பின், ஜெர்மனியிலிருந்து, கடந்த மாதம், 17ல் ரஷ்யா திரும்பினார் நவால்னி. ஆனால், மாஸ்கோ விமான நிலையத்திலேயே, அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான மோசடி வழக்கு ஒன்றில், அவருக்கு, கடந்த, 3ம் தேதி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்ட்டது. இதை எதிர்த்து, மாஸ்கோ நீதிமன்றத்தில், நவால்னி மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
21-பிப்-202116:20:20 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இங்குள்ள தீய முக்கா போல் கல்கத்தாவில் ஒரு தீய மம்தா கட்சி. போலிஸியை கையில் வைத்து கொண்டு பலி வாஙகுகிறது. வெறி ஆட்டம் போடுகிறது. துணை நிற்கும் போலீஸை அவர்கள் குற்றத்திலிருந்து காக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X