திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 5 ஆயிரத்து 435 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசின் இலவச கால்நடை மற்றும் கறவை மாடு வழங்கும் திட்டம், 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, புறக்கடை கோழி வளர்க்கும் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கிராமசபையில் தேர்வாகும் பயனாளிகளுக்கு, இலவச ஆடு, மாடு மற்றும் கோழி ஆகியவை வழங்கப்படுகிறது. இலவச திட்டத்தில் பயனடையும் பயனாளி, மற்ற திட்டங்களில் பயன்பெற முடியாது.திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில், 400 பயனாளிகளுக்கு, கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. தலா, 35 ஆயிரம் ரூபாய் வீதம், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.கோழி வழங்கும் திட்டத்தில், 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 25 கோழிக்குஞ்சுகள், 1.04 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட உள்ளது. நான்கு ஆடுகள் வீதம், 5 ஆயிரத்து 435 பயனாளிகளுக்கு, ஆடுகள் வழங்கப்படுகிறது.நான்கு ஆடுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய், கொட்டகை அமைக்க, 2,000, போக்குவரத்து உள்ளிட்ட செலவுக்கு, 450 என, 12 ஆயிரத்து, 450 ரூபாய் மதிப்பில் ஆடு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், ஆடு வழங்கும் திட்டத்துக்கு, 6.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE