சென்னை:சேவா பாரதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் கறுப்பர் கூட்டம் சுரேந்தருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச், 19ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கறுப்பர் கூட்டம்' என்ற 'யூ-டியூப்' சேனலில் ஹிந்து கடவுள்கள் மற்றும் ஹிந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், கருத்துக்கள் பகிர்வதாக, பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், கடந்தாண்டு ஜூலை, 13 ம் தேதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'கறுப்பர் கூட்டம்' யூ-டியூப் சேனல் மீது வழக்குப் பதிந்தனர்கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் செந்தில் வாசன் என்பவரை மத்திய குற்றப் பிரிவு போலீசார், கடந்தாண்டு ஜூலை, 15ம் தேதி, சென்னை வேளச்சேரியில் கைது செய்தனர்.
மறுநாள் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் சுரேந்திரன் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.கறுப்பர் தேசம் என்ற பெயரில், சாத்தான் குளம் இரட்டை கொலை சம்பவம், சேவாபாரதி அமைப்பால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று அவதுாறு செய்திகள் அடங்கிய ஒளி நாடாவை யூ-டியூப் சேனல் வெளியிட்டது.
இந்த நிகழ்வு, சேவா பாரதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தாக, 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சேவாபாரதி தலைவர் ரபு மனோகர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு முடியும் வரை, சேவாபாரதிக்கு எதிராக அவதுாறு செய்திகளை வெளியிட இடைக் கால தடை கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரனைக்கு வந்தது.சேவாபாரதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி, இம்மனுவில் சுரேந்தருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை அடுத்த மாதம், 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE