சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது 'குண்டாஸ்'

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொலை முயற்சி வழக்கில், கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.திருப்பூர் பூலவாரி சுகுமார் நகரை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை, கடந்த மாதம், 11ம் தேதி, திருப்பூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த ஷேக் முகமது, 38 என்பவர், கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தார்.ஷேக் முகமதுவை தெற்கு போலீசார் கைது செய்தனர். இவர் மீது, வடக்கில், ஐந்து வழிப்பறி வழக்கு, ஒரு திருட்டு வழக்கு;

திருப்பூர்:கொலை முயற்சி வழக்கில், கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.திருப்பூர் பூலவாரி சுகுமார் நகரை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை, கடந்த மாதம், 11ம் தேதி, திருப்பூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த ஷேக் முகமது, 38 என்பவர், கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தார்.ஷேக் முகமதுவை தெற்கு போலீசார் கைது செய்தனர். இவர் மீது, வடக்கில், ஐந்து வழிப்பறி வழக்கு, ஒரு திருட்டு வழக்கு; சென்ட்ரல் போலீசில், நான்கு வழிப்பறி வழக்கு, வீரபாண்டி, தெற்கு போலீசில் தலா ஒரு வழிப்பறி வழக்கு என, 13 வழக்குகள் உள்ளது.பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், ஷேக் முகமதுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அவரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X