பொது செய்தி

தமிழ்நாடு

இன்று, என்.எம்.எம்.எஸ்., தேர்வு 3,878 பள்ளி மாணவர் பங்கேற்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:பள்ளி மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) திருப்பூர் மாவட்டத்தில், 36 மையங்களில் இன்று நடக்கிறது.எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிளஸ் 2 வரை உதவித்தொகை பெறுவதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது.அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு

திருப்பூர்:பள்ளி மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) திருப்பூர் மாவட்டத்தில், 36 மையங்களில் இன்று நடக்கிறது.எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிளஸ் 2 வரை உதவித்தொகை பெறுவதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது.அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பாண்டு தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தில், 3 ஆயிரத்து, 878 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்கள் தேர்வெழுத வசதியாக, பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் - 15 மையம், பல்லடம் - 7, உடுமலை - 6, தாராபுரம் - 8 என, 36 மையங்களில் இன்று தேர்வு நடக்கிறது. அரசு வழிகாட்டுதலின்படி தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X