அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகளிர் கடன் தள்ளுபடி

Added : பிப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம்'' எனதி.மு.க.தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.கோவை மாவட்டம்பொள்ளாச்சியில் நேற்றுநடந்த'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு அ.தி.மு.க.வினருக்குதொடர்பு இல்லை என்றனர். துணை சபாநாயகர்
 மகளிர் கடன் தள்ளுபடி

பொள்ளாச்சி:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம்'' எனதி.மு.க.தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்டம்பொள்ளாச்சியில் நேற்றுநடந்த'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு அ.தி.மு.க.வினருக்குதொடர்பு இல்லை என்றனர். துணை சபாநாயகர் ஜெயராமன் என்மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.அ.தி.மு.க.வுக்கு சம்பந்தம் இருந்தால் ஆதாரத்தை வழங்கலாம் என முதல்வர் தெரிவித்தார்.

தற்போது அ.தி.மு.க.வை சேர்ந்த அருளானந்தம் பாபு ஹேரான்பால் ஆகிய மூவரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.அவர்களைகாப்பாற்றவே ஆளுங்கட்சி நாடகமாடுகிறது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடூரக்காரர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க. பேராடுகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சரியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் மகளிர் ஏழை மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் துவங்கப்படும்'' என்றார்.


'ஹைடெக்' மாற்றம்

ஸ்டாலின் கூட்டங்களில் 'துண்டுச்சீட்டு' வைத்து பேசிய நிலையில் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். இதனால் நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளார்.நேற்றைய பிரசாரத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேசும்போது ஸ்டாலின் முன் பெரிய 'டிவி' திரையில் குறிப்புகள்ஓடின. 'போடியம்' முன் இருபுறமும் 'டெலிபேடு' வைக்கப்பட்டிருந்தது. 'ஐபேக்' ஊழியர் கம்ப்யூட்டர் மூலம் வாசகங்களை திரையில் ஓட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
21-பிப்-202108:34:14 IST Report Abuse
R.RAMACHANDRAN தேர்தல் தேதி அறிவித்தபின் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என வாக்குறுதி அளிக்காமல் முன்னதாகவே உளறி கொண்டிருப்பதால் ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தகுதியில்லாதவர்களுக்கெல்லாம் வாரி வழங்கி இந்த நாட்டை கடனில் திளைக்கச் செய்கிறார்கள் ஆட்சிக்கு வந்து சூறையாடலாம் என்பதற்காக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X